ஈரோடு மாவட்டம் பவானி அருகே பவானி செவலை நண்பர்கள் சார்பில் நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயத்தில் 150 -க்கும் மேற்பட்ட குதிரைகள் சீறி பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டியில் பவானி செவலை நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் ஆடி பண்டிகை முன்னிட்டு குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, பெரிய குதிரை என நான்கு பிரிவுகள் கீழ் 150 க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. குதிரைகள் 8 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை குதிரைகள் பந்தயத்தில் சீறிப்பாய்ந்தது.
பந்தயத்தில் முதல் மூன்று இலக்கை அடையும் குதிரை உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பையுடன் பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து குதிரைகள் பந்தயத்தில் சீரிபாய்ந்து சாலையோரம் வழி நெடுகிலும் இருந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதற்கு முன்னதாக போட்டியை பவானி எம்எல்ஏ கே.சி. கருப்பண்ணன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.