Close
செப்டம்பர் 20, 2024 3:38 காலை

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தின விழாவில் எம்பி அப்துல்லா பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் நாடளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்தார்.

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கமும் இணைந்து 75 -ஆவது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடியது.

விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  எம்.எம். அப்துல்லா கலந்து கொண்டு, தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது நான் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கொண்டாடுகிற முதல் சுதந்திர தினவிழா இது என்பதோடு, நான் தேசியக் கொடியேற்றிய முதல் நிகழ்வும் இந்த பள்ளியில் தான் நிகழ்ந்திருக்கிறது என்பதில் பெருமைப்படுகிறேன். எல்.கே.ஜி தொடங்கி பன்னி ரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை இங்கு  கௌரவித்தார்கள்.

இந்தபள்ளியின் மீது நம்பிக்கை வைத்து குழந்தைகளை தொடர்ந்து படித்து வைத்திருக்கிறபெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகளெல்லாம் தேசபக்தியோடு அமைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் எனது 75 ஆவது சுதந்திரதின நல்வாழ்த்து களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று எம்பி அப்துல்லா குறிப்பிட்டார்.

 புதுக்கோட்டைவிழாவில் தேசப்பற்று வேற்றுமையில் ஒற்றுமை, அகிம்சை வழியில் அண்ணல் காந்தி பெற்ற சுதந்திரம் போன்றதலைப்புகளில் மௌன நாடகம் மற்றும் தேசம் பற்றிய பாடல்கள்ஆகியவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. தேச தலைவர்களின் உருவம் பொறித்த நாணய கண்காட்சியை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் லெட்சுமி அண்ணாமலை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களும் பெற்றோர்களும் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி பிறந்த மாணவர்களுக்கு பிறந்தநாள்பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளை ரோட்டரி சங்கநிர்வாகிகள் வழங்கினர்.

பள்ளியின் மேலாண்மை இயக்குநர் நிவேதிதாமூர்த்தி மற்றும் மாகாராணி ரோட்டரி சங்கத்தினர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் கலா கிருஷ்ணா, ராஜலட்சுமிநெடுஞ்செழியன்,  சினேகா, கே. கருணாகரன், வேங்கடசுப்பிரமணியன்,  அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.நிகழ்ச்சியை ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், கணியன் செல்வராஜ், மற்றும்  உஷா  ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் மூவர்ணக் கொடி ஊர்வலம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அமுதப் பெருநாள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில்  கடந்த 11 -ஆம் தேதி தேசியக் கொடியோடு வீதிகளில் அணிவகுத்து ஊர்வலமாகச் சென்றனர்.

புதுக்கோட்டை
வெங்கடேஸ்வரா பள்ளி சார்பில் நடத்தப்பட்ட கொடி ஊர்வலத்தில் பங்கேற்ற முதல்வர் தங்கம் மூர்த்தி மற்றும் மாணவர்கள்

பள்ளியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பள்ளியைச் சுற்றியுள்ள திருவப்பூர் மாரியம்மன் கோவில் வீதி, மேட்டுத்தெரு, மியூசியம் ரோடு ஆகிய வீதிகளில் தேசியக்கொடியோடு ஊர்வலமாக சென்று பூக்கடை வியாபாரிகள், பாதசாரிகள், வீடுகளில் குடியிருப்பவர்களை அழைத்து தேசியக்கொடியை இலவசமாக வழங்கி தங்கள் தேச உணர்வை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வு தொடர்பாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது “இந்திய நாடு சுதத்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை அமுதப் பெருநாளாக கொண்டாடுவோ மென பாரதப் பிரதமர் அறிவித்துள்ளார்.இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தேசப்பற்றினை வெளிப்படுத்த தத்தமது வீடுகளில் மூவர்ணக் கொடியேற்றி 75வது சுதந்திர தினத்தை பெரும் திருவிழாவாகக் கொண்டாடுவோம்” என்று கூறினார்.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சுதந்திரக் கொடிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் துணைமுதல்வர் குமாரவேல் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களின் மூவர்ணக் கொடி ஊர்வலத்தை வழிநடத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top