Close
டிசம்பர் 15, 2024 3:38 மணி

மதுரையில் விடிய விடிய மழை : சாலைகளில் தேங்கிய மழை நீர்..!

விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

மதுரை :

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்த நிலையில் தென் மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பரவலான மழை பெய்தது. அதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் உள்ள வி.கே.பி நகர், எல்லிஸ்நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

மதுரை எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரக்கூடிய பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்த நிலையில் ஒவ்வொரு மழைக்கும் எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பக்தர்களும் சிரமத்திற்கு ஆளாவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top