இன்று 30-ஆவது உலக பத்திரிகை சுதந்திர நாள் நிறைவு தினம். 1993ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள “யுனெஸ்கோ” அமைப்பு பத்திரிகை சுதந்திரத்தின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல்.
பத்திரிகை சுதந்திரத்திற்காக உயிர்நீத்த பத்திரிகையாளர் களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தற்போது களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை கெளரவிக்கும் நோக்கிலும் இந்த தினத்தை மே 3, பத்திரிகை சுதந்திர நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஐ.நா. சபைக்கு பரிந்துரைத்தது.
அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாட ஆரம்பித்தது.
இது குறித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மேனாள் வரலாற்றுத்துறை பேராசிரியரும், வாசகர் பேரவை செயலருமான சா. விஸ்வநாதன் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் ஐநா ஒரு கருப்பொருளை வெளியிடும். 2023ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்-“Shaping a future of Rights: Freedom of Expression as a driver for All other Human Rights ” “உரிமைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது; மற்ற அனைத் து மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்துச் சுதந்தி ரம்”. “பத்திரிகைச் சுதந்திரம்” என்பது ஜனநாயகத்தின் ஆணி வேர். மக்களின் உரிமைகளைப் பாதுக்காக்க பத்திரிகை சுதந்திரம் அவசியம்.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது பத்திரிகை நடத்துவதற்கான சுதந்திரம் மட்டுமன்று. எவ்வித இடையூறும் அச்சுறுத்தலும் இன்றி செய்திகள் திரட்டப்படல், எவ்வித தடங்கலும் இல்லாமல் அது செய்தித்தாள் அலுவலகங்களைச் / தொலைக் காட்சி, வானொலி / சென்றடைதல் , தணிக்கை கட்டுபாடின்றி செய்திகளை அச்சிடல், அச்சான செய்திகள் தடை ஏதுமின்றி மக்களிடம் பரவ விடுதல், செய்தி வெளியிட்ட மைக்காகப் பத்திரிகைகளையும் பத்திரிகையாளர்களையும் ஒடுக்கும் அடக்கு முறைகள் இல்லாத சூழ்நிலை அமைதல்- இவைகள் பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கிய கூறுகள்.
இந்தியாவின் முதல் பத்திரிகை ஆணைக்குழு (press Commission)” பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துகளைக் கொண்டிருக்கவும், செய்திகளைப் பெறவும், அச்சிட்டு வெளியிடவும் இருக்கின்ற சுதந்திரம்” என்று பத்திரிகை சுதந்திரத்தை விளக்குகிறது. பத்திரிக்கை சுதந்திரம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள “கருத்துச் சுதந்திரத்தின்” மற்றொரு வெளிப்பாடே ஆகும்.
பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பல்வேறு தடைகளும், அச்சுறுத் தல்களும் எப்போதும் உண்டு. நவீன உலக வரலாற்றில், கம்யூனிசம், பாசிசம், நாசிசம் போன்ற கொள்கைகளை செயல்படுத்திய பழைய சோவியத் யூனியன், முஸோலினி யின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி போன்ற நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் என்பதே கிடையாது. இந்தியாவில் அவசரநிலையின்போது பத்திரிகை சுதந்திரம் கேள்விக் குறியானது.
சுதந்திரமான பத்திரிகைகளே ஆட்சியாளர்களின் தவறு களைச் சுட்டிக்காட்ட முடியும். அதுவே ஆட்சியாளர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளவும் உதவும் . மிகச் சமீபத்திய உதாரணம், தமிழக அரசு 12 மணி வேலை நேர சட்டத்தை திரும்பப் பெற்றது.
உண்மைச் செய்திகளை வெளியிட்டதற்காக பத்திரிகையா ளார்கள் பலரும் தங்கள் இன்னுயிர்களை இழந்திருக்கிறார் கள். அவர்களின் தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்வோம். பல்வேறு இன்னல் களுக்கிடையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களை இந்த தினத்தில் பாராட்டுவோம். நம் உரிமைகளைப் பெற, பாதுகாக்க பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என்றார் அவர்