Close
செப்டம்பர் 19, 2024 7:06 மணி

“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் கீழடி அகழ்வாராய்ச்சி தளங்கள், அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த 115 அயலகத் தமிழர்கள்…!

சிவகங்கை

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அயலகத்தமிழர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவிப்பின்படி, ”வேர்களைத் தேடி” என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வருகைப் புரிந்துள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் மற்றும் அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு, தமிழர்கள் தொன்மை மற்றும் பாரம்பரியம் குறித்து, அறிந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, “வேர்களைத் தேடி” என்ற திட்டத்தின் கீழ் முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் தொன்மை, பெருமை, கலாச்சாரத்தினை விளக்கும் இடங்களுக்கும், தமிழர்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் கலைகளை அறிமுகப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் கொண்ட இரு வார பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ”வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக                      57 அயலகத் தமிழ் மாணவ, மாணவியர்களை கொண்ட முதற்கட்ட பயணம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக கடந்த 1.8.2024 முதல்  15.8.2024 வரை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைஆணையரகம் மூலம் சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டுத் துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, செய்தி மற்றும் மக்கள்  தொடர்புத் துறை மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட பிறத்துறைகளுடன் இணைந்து செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை அறிந்து கொள்ளும் பொருட்டு, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மணி, ஆஸ்த்திரேலியா, மொரிசியஸ், இந்தோனேஷியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை புரிந்துள்ள 115 மாணவர்கள் கடந்த 7.8.2024 அன்று கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட அரண்மனையி னை பார்வையிட்டு, அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.

சிவகங்கை
கீழடி அகழாய்வு மையத்தை பார்வையிட்ட அயகலத்தமிழர்கள்

அதனைத்தொடர்ந்து, திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மற்றும் அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு, தமிழர்கள் 2,000 ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்த நகர நாகரிகயங்களின் சிறப்புகள் குறித்தும், தமிழர்களின் தொன்மை மற்றும் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.

மேலும், இத்திட்டத்தின் முடிவில் அயலகத்திலிருந்து பங்குபெறும் இளைஞர்கள் அவர்களது நாடுகளுக்கான தமிழ்நாட்டின் கலாச்சார தூதர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது,  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  ஆ.தமிழரசி ரவிக்குமார் , மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வேங்கடசுப்பிரமணியன், உதவி சுற்றுலா அலுவலர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top