ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் ஹனியே முன்பு ஈரானில் கொல்லப்பட்ட நிலையில், இப்போது காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாகியா சிங்க்வார் மாயமாகி உள்ளார். அவர் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இது முன்பும் யாகியா சிங்க்வார் இறந்ததாக பலமுறை சொல்லப்பட்டது, அதெல்லாம் ஹமாஸை குழப்பி சிங்குவாரை வெளிக் கொண்டு வந்து கொல்லும் முயற்சி என சொல்லபட்டது. ஆனால் இம்முறை அவர் இறந்ததற்கு ஆதாரமான தகவல்கள் வருகின்றன.
சிங்குவார் மிக மிக விரக்தியான மனநிலையில் இருந்தார். அவர் இஸ்ரேலுடன் கடைசி நேரத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம். இல்லை இஸ்ரேல் அவரை வைத்து ஏதோ விளையாடலாம். எதுவும் புரியவில்லை.
கடந்த அக்டோபரில் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கும் போது அதற்கு பெரும் நம்பிக்கை இருந்தது. தென்மேற்கில் தாங்கள் தாக்கும் போது வடக்கே ஹெஸ்புல்லா வரும். மேற்கு கரையில் ஜிகாதிகள் வருவார்கள். சிரியாவும், ஈரானும் வரும். எனவே பெரும் போர் வெடிக்கும். இஸ்ரேல் திணறும் என ஹமாஸ் கணித்து இருந்தது.
ஆனால் 11 மாதங்களை கடந்த நிலையிலும், போரில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஹெஸ்புல்லா பெரிய அளவில் வரவில்லை. ஈரான் தன்னால் முடியாது என ஒதுங்கி விட்டது. ஹமாஸ் தலைவரை தன் நாட்டிலே பாதுகாக் முடியாமல் விழுந்து விட்டது.
லெபனானில் பேஜரெல்லாம் வெடிக்க, வாக்கிடாக்கிகள் சிதற முக்கிய தலைகளெல்லாம் உருண்டது. இதனால் அதிர்ந்த ஹெஸ்புலலாவும் மெல்ல அமைதியாக தொடங்கி விட்டது.
இதனால் தாங்கள் தனித்து விடப்பட்டதாக தவித்த சிங்குவா மிகப் பெரும் மன உளைச்சலில் தான் இருந்தார். அவர் ஒன்று பாதுகாப்பாக வெளியேறியிருக்கலாம் அல்லது கொல்லபட்டிருக்கலாம் என்ற கணிப்பு தான் தற்போது நிலவுகிறது. ஆனால் அவர் தற்போது களத்தில் இல்லை என்பது மட்டும் உறுதியாகி விட்டது.
ஆக தங்கள்மேல் கைவைத்த யாரும் உயிரோடு இருக்க முடியாது எனும் அந்த விதியினை மறுபடி மறுபடி உறுதி செய்கின்றது இஸ்ரேல். இனி காசா யுத்தம் ஒரு முடிவை நோக்கி செல்லும். ஆனால் ஹெஸ்புல்லாவினை இஸ்ரேல் விடுவதாக தெரியவில்லை. ஒருவேளை அதன் தலைவரும் மாயமாகும் வரை அங்கேயும் போர் தொடரலாம்.
ஆக ஹமாஸ், ஹெஸ்புல்லாவின் வீழ்ச்சிக்கு அதனை துாண்டி விட்டு, உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்து, விலகி நின்று வேடிக்கை பார்க்கும் சில நாடுகளும், சில தலைவர்களும் தான் காரணமே தவிர, இஸ்ரேல் காரணமல்ல. ஹமாஸ் யுத்தம் தொடங்கும் முன்பு போடப்பட்ட திட்டம் ஒரு வேளை நிறைவேற்றப்பட்டிருந்தால், இஸ்ரேல் ஒரு வேளை நெருக்கடியில் சிக்கியிருக்கலாம்.
அப்படி ஒரு நிலை வந்தால், உலகப்போர் மூண்டிருக்கும். இப்போது இஸ்ரேல் நிமிர்ந்து கொண்டு அடித்து நொறுக்கக் காரணம், இஸ்ரேல் மீது போரை துாண்டியவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒதுங்கியதும், ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களும் தான் காரணம் என உலகப் போர் நிலவரத்தை கணித்து வரும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.