Close
நவம்பர் 14, 2024 4:29 மணி

‘தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் மாற்றம் இருக்காது’ – ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் -கோப்பு படம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் அதன் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்க கொள்கையின் நீண்டகால போக்கு என்று நான் கூறிவரும் விஷயத்தை அங்கு நடைபெற்றுவரும் தேர்தல் மாற்றியமைக்கும் என்று நான் நம்பவில்லை.

அநேகமாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவில் இருந்து தொடங்கி அமெரிக்கா அதன் சர்வதேச கடமைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது. உதாரணமாக அமெரிக்கா தனது துருப்புக்களை (ராணுவம்) நிலைநிறுத்துவதில் தயக்கம் காட்டுகிறது.

அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகளைத் திரும்பப் பெற்றார். அதிபர் ட்ரம்ப் இந்த விஷயத்தில் இன்னும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். அமெரிக்காவின் முந்தைய ஆதிக்கம் மற்றும் தாராளவாத மனப்பான்மை இனியும் தொடராத ஓர் உலகத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top