Close
நவம்பர் 21, 2024 3:07 மணி

 உலகை ஆளப்போகும் மும்மூர்த்திகள், முதல் முறையாக..!

மும்மூர்த்திகள் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் -கோப்பு படம்

நிச்சயமாக உலகம் இப்படி ஒரு ரஸவாதத்தை எதிர்பார்த்திருக்க போவதில்லை.

இந்த 2024 ஆம் ஆண்டில் அது நடந்தே விட்டது. இதற்கு முன்னர் இது போல் இல்லை…. இனி ஒன்று வந்தாலும் கூட… அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் கூட…. இதுவே முதலாவதாக உலக வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

வலது சாரி என்பதின் பொருள் நாட்டின் நலன் மற்றும் இறையாண்மை பிரதானமாக இருக்கக்கூடிய அம்சம் என்பதாக இலக்கணம் வகுத்து தந்திருக்கிறார்கள்.

யார் இந்த மூவர் கூட்டணி….

ரஷ்யா, இந்தியா, அமெரிக்கா….

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் அங்கு அசைக்க முடியாத சக்தியாக கோலோச்சி கொண்டு வருகிறார். நம் பாரத தேசத்தில்… பிரதமராக நரேந்திர மோடி தனது வல்லைமையை….உலக ஆளுமையை நிரூபித்து… ஓர் உலக தலைவராக முதல் இடத்தில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இருக்கிறார். சொல்வது நாமல்ல… அமெரிக்க மார்னிங் ஸ்டார் பத்திரிகை சர்வே.

அடுத்ததாக இந்த ஜோதியில்… ஐக்கியமாகி இருப்பது டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக இந்த பதவிக்கு வரும் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார்.

அப்படி என்ன இந்த மூவரால் செய்துவிட முடியும்……?????

இந்த கேள்வியை இப்படிக் கேட்கக்கூடாது…… என்னவெல்லாம் இந்த புதிய மும்மூர்த்திகளால் சாதித்திட முடியும் என்று கேட்டு இருக்க வேண்டும். ஆம்….. கேள்வியிலேயே பாதி விடை ஒளிந்து கொண்டு இருக்கிறது. மீதியை வரும் காலங்களில் நேரிடையாக பார்த்து ரசிக்க இருக்கிறோம்.

நிச்சயம் அத்தனை உன்னதமான விஷயங்கள் இந்த உலகில் நடக்க இருக்கின்றன. இந்த மூவருக்குள்ளும் ஒரேயொரு மனப்பான்மையுடன் இயங்கக்கூடியவர்கள் என்பதே இன்றுள்ள நிலையில் மிகப் பெரிய விஷயம். முதலாவது, இரண்டு வல்லரசு நாடுகளாக அறியப்பட்டவற்றோடு நாளைய பேரரசு பாரதமும் இணைந்திருக்கும் நிலையே அளப்பரிய சமாச்சாரம்.

நடந்தே விட்டது. ஒன்றாக பின்னிப் பிணைந்து செயல்பட ஆரம்பித்தால்… ஒரே நேர்கோட்டில் இயங்குமானால்… இது போன்றதொரு கூட்டணி இதற்கு முன்னர் அமைந்ததில்லை என கட்டம் கட்டி கட்டியம் கூறிவிடலாம்.

எப்படி……

இன்று உள்ள அமெரிக்கர்களுக்கு இரண்டு முக்கிய பிரச்சினை இருக்கிறது. ஒன்று பொருளாதாரம் மற்றொன்று வாழ்வாதாரம். இது யுத்தத்திற்கான யுகம் இதுவல்ல என்று கடந்த பல ஆண்டுகளாக நம்மவர் சம்மட்டி கொண்டு அடித்து சொல்லி பொருளாதார வளர்ச்சி நோக்கி நகர்ந்து கொண்டே வருகிறார்.

இதற்கு சாட்சியாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நம் இந்திய தேசத்தின் வசம் தங்கத்தின் கையிருப்பு அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால் அவருடனான டொனால்ட் ட்ரம்ப் கூட்டணி அமெரிக்க பொருளாதார வளர்ச்சி காணும் திட்டமிடலில் முதலில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தோதாக தான் அமெரிக்க அதிபரானதும் தன் ஆட்சியின் கீழ் அமெரிக்க கச்சா எண்ணெய் வளங்களை மேம்படுத்த…. அவற்றை கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த…. என ஆக்கப்பூர்வமாக இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்.

அப்படி என்றால்……இது நாள் வரையில் ஏதோ க்ளோபல் வார்மிங் என்றெல்லாம் சொல்லி கொண்டு இருந்தார்களே என்றால்…. அதெல்லாம் இடதுசாரி அமைப்புகளின் பல்லிளிக்கும் பம்மாத்து வேலைகள் என்று நமட்டு சிரிப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..

சரி …..

இது பொருளாதார சமாச்சாரம்., அதென்ன வாழ்வாதாரம்… ஆணானப்பட்ட அமெரிக்காவிற்கு வாழ்வாதாரத்திற்கு என்ன குறைச்சல்…!?!?

வேறென்ன கலாசாரம்., அதாவது வானவில் சமாச்சாரம். முன் எப்போதும் இல்லாத வகையில் LGPTQ அட்டகாசங்கள் அத்துமீறி போய் விட்டது. இதனை உலகம் முழுவதும் பரவச் செய்ய ஃபண்டிங் வேலை எல்லாம் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒன்றும் புரியவில்லையே என்பவர்களுக்கு, இன்னமும் குழந்தை மனதுடன் இருப்பதை நினைத்து பெருமை கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நம்மூரில் புதியதாக முளைத்து இருக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் வகையறா.

நன்கு கவனித்து பார்த்தால் யார் இதனை முன்னெடுக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்……. யாரெல்லாம் இதற்கு துணை போகிறார்கள் என்பதை சற்றே கூர்ந்து கவனித்தால்… கூவம் போலும் நாற்றமெடுக்கும்…. அதன் பொருட்டே சிம்பாலிக்காக கரையில். போகட்டும் நம் விஷயத்திற்கு வருவோம். இத்தோடு நிறுத்திக் கொள்ள வில்லை அவர்கள்.

உலகளாவிய வளர்ந்து வரும் நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு அட்டகாசங்கள்….. சமுக கட்டமைப்பை உருக்குலைக்கும் வேலைகளில் ஜரூராக ஈடுபட்டு அழிச்சாட்டியம் செய்து வந்த நிலையில்…… இனி வலது சாரி அமைப்புக்களின் கை ஓங்கி இவர்களின் பிடறியில் போடும். இதற்கும் ஆகச் சிறந்த உதாரணம் தான் நம்மூர் ஜல்லிக்கட்டு சம்பவம்.

ஏதோ இவர்கள் தான்…., இந்த இடதுசாரி அமைப்புகள் தான் உலகை காக்க வந்த ரட்சகர்கள் போல மிருகங்களை காக்கும் பொறுப்பு கொண்டவர்கள் போல் பாவ்லா பண்ணிக் கொண்டு பாலின பேதம் இல்லை என்பது வரை ஏக ஆர்ப்பாட்டம் அழிச்சாட்டியம் எல்லாம் செய்து கொண்டு இருந்தனர்.

இனி ஒட்ட நறுக்கப்படும் அவர்களிடம் தேவையில்லாததை…. சமூகம் என்பது பொறுப்புடமை என்பதை பொறுப்பாக சொல்லி கொடுக்க இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த முறை அமெரிக்கா மாறும்.

அடுத்ததாக விளாடிமிர் புடின். பால் வடியும் முகம். ஆனால் பச்சை குழந்தை அல்ல அவர். உலகளாவிய பொருளாதார தடை அமலில் உள்ள இந்த சூழ்நிலையிலும் ரஷ்ய பொருளாதாரம் சீரிய முறையில் வளர்ச்சி கண்டு வருகிறது என்றால் அதற்கு இந்த மேற்குலகம் அடையாளங்காட்டும் அசுரனின் அசாத்திய திறமை காரணம் என்கிறார்கள் உலக அரசியல் நிபுணர்கள்.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. அந்நாளைய அமெரிக்கர்கள் நயவஞ்சக சூழ்ச்சியால் இந்த சோவியத் யூனியனை சூறையாடி. அதன் மிச்ச சொச்ச எச்சங்களை கொண்ட ரஷ்யாவை கட்டமைத்து இன்று கொடி கட்டிப் பறக்கிறார் இந்த முன்னாள் உளவாளி. ஆகச்சிறந்த தேசாபிமானி. ஆதலாலேயே மேற்கு உலக நாடுகளுக்கு இவரை கண்டால் ஆகாது.

நேட்டோ என்கிற அமைப்பை உருவாக்கி, விடாமல் இவரை நோண்டிக் கொண்டே வருகிறார்கள். காரணம் அவ்வளவு பயம் இந்த அடிப்படை வாத கிருஸ்தவர்கள் மீது. ஆம் இவர்களே ஆதி பழமைவாத கிருஸ்தவர்கள்…. இன்னமும் சரியாக சொல்வதென்றால் கிருஸ்துவுக்கு முந்தைய கிருத்துவர்கள். அதன் பொருட்டே பல ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்களை ஆக மாட்டேன் என்கிறது.

என்ன வித்தியாசம்…??

என்பவர்களுக்கு இவர்கள் மத அடிப்படையில் சிறுபான்மையினர். ஆனால் பின்நாளைய கிருத்துவம் மிஷனரிகள் வசமானது…. உலகம் முழுமைக்கும் வியாபித்து இருப்பது. வியாபர தந்திரங்களை கொண்டது என்பதாக புரிந்து கொள்ளக்கடவது.

இந்த அடிப்படை வாத கிருஸ்தவர்களின் ஓர் பிரிவினர்  தான் யூதர்கள் என்கிறார்கள். இந்த இரு பிரிவினருக்கும் நம் இந்திய தேசத்தை நிரம்பவே பிடிக்கும் என்பது இங்கு வாழும் இந்தியர்களுக்கே பலருக்கும் தெரியாத சங்கதிகளில் ஒன்று.

ஆக இரண்டு வல்லரசு நாடுகளின் இன்றுள்ள கள அரசியல் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டோம். இதில் நம் இந்திய தேசத்தை பற்றி அதன் தலைமையை பற்றி சொல்லவே வேண்டாம்.

ஓர் சமாச்சாரம் பாருங்கள்…. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய நரேந்திர மோடியை வானளாவ புகழ்ந்து இருக்கிறார் டிரம்ப்.

கூடவே நம்மூர் ராகுலும் வாழ்த்து மடல் ஒன்றை தட்டிவிட்ட…. கறாராய் கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார் நாளைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப். வாழ்கின்ற நாட்டிற்கு உண்மையாக இருக்க பாருங்கள் என்கிற தொனியில் இருக்கிறது ராகுலுக்கு டிரம்ப் கொடுத்த பதில்.

போகிற போக்கில் செய்கின்ற விஷயங்கள் போலில்லாமல் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல சிக்கலான விஷயங்களை போட்டிப் போட்டுக் கொண்டு சிக்கெடுக்க போகிறார்கள் இந்த மூவரும்.

அதில் நம்மவர்களுக்கு முதல் காரியம் பல்டிஸ்தான். சரியாக சொல்வதென்றால் கில்கிட்-பல்டிஸ்தான். பாகிஸ்தானிய வசமிருக்கும் காஷ்மீர் பிரதேசம். இனிமேல்தான் களமிறங்க போகிறார்கள் போலிருக்கிறது என எண்ண வேண்டாம்….. ஆல்ரெடி ஒர்க் ஸ்டாடர்ட். ஜனநாயக முறைப்படி காஷ்மீர் தேர்தல் நடந்து முடிந்து அங்கு ஆட்சி அமைந்து விட்டது.

ஆனால் பாவம்….. கட்சி ரீதியாக பாஜக தேர்தலில் தோற்றுவிக்கப்பட்டது என கொக்கரித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு தெரியாத சங்கதி ஒன்று உள்ளது. அது நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையாக ஆதரவு கிடைத்திருக்கிறது.

தனிப் பெரும் கட்சியாக அதிக சதவிகித வாக்குகளை பெற்ற கட்சியாக அது இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் நாளை ஆட்சிக்கு வருவதை யாரும் தடுத்து விட முடியாது என்பதை அவர்களே… அங்குள்ளவர்களே நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

ஆனால் விஷயம் அதுவல்ல. பாகிஸ்தானிய வசமிருக்கும் காஷ்மீர் பகுதியின், அதாவது கில்கிட் பல்டிஸ்தான் பிராந்தியங்களுக்கான நியமன உறுப்பினர்களை நியமித்து அதிரடித்திருக்கிறது நம் இந்திய மத்திய அரசு.

சட்டப் படி அவர்களுக்கு முழு உரிமை கொடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள். இப்படி புரிந்து கொள்ள பாருங்கள்….வண்டி எண் RC புக் எல்லாம் நாம் வைத்திருக்க வண்டியை அவர்கள் வைத்து இருந்தால்… திருட்டு வண்டி என சுலபமாக அடையாளப் படுத்த முடியும்.

பிறகென்ன வண்டியை கொண்டு வர வேண்டியதுதானே பாக்கி. அந்த நிலையில் தான் தற்சமயம் காஷ்மீர் இருக்கிறது. தற்போதைய உமர் அப்துல்லாவுக்கு விபரம் சொல்லப்பட்டிருக்கிறது.

மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு என உடனே சொல்லி விட்டார் அவர்….. வேண்டுமானால் தற்சமயம் உள்ள காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விடவும் தயார் என சொல்லி இருக்கிறார். இவர்களும் தற்போதைக்கு அவசியம் இல்லை… இருக்கட்டும் அவர்களும் …..வேறு வகையில் உதவும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

உமர் அப்துல்லாவுக்கு ஏக குஷி. காரணம் இது நடந்தால்…… ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தின் முதல், முதலமைச்சர் என்கிற பெயர் கிடைக்கும் வரலாற்றில் இடம் கிடைக்கும் என புரிந்து வைத்திருக்கிறார். தற்போது எதிர் வரிசையில் உள்ள காங்கிரஸ் இந்த இடத்தில், காஷ்மீர் ஆளும் அரசில் பங்கு கொண்டு இருக்கிறது. அதனால் இதில் வாய் திறக்க முடியாது.

ஏதேனும் கருத்து கந்தசாமி வேலை பார்க்க வாய் திறந்தால்.. நாடே திரண்டு நின்று கிழித்து விடுவார்கள் என்பதை நன்கு உணர்ந்து பேய் முழு முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஆரம்ப கட்ட நகர்வுகள் மாத்திரமே….. இன்னும் நிறையவே இருக்கிறது வரிசை கட்டி வர…

தொடராய் தொடரும்…… விஷயங்களும், சம்பவங்களும், அதனை சொல்லும் பதிவுகளும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top