Close
மே 20, 2025 12:00 மணி

இந்தியாவின் மீதான தாக்குதல் : ரஷ்ய ஊடகங்கள் காட்டம்..!

பிரபல தொழில் அதிபர் கெளதம் அதானி-கோப்பு படம்

இந்திய தொழில் அதிபர் அதானி மீதான வழக்கு, தனிப்பட்ட நபர் தொடர்புடைய விவகாரம் இல்லை. இது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை என ரஷ்ய ஊடகமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவிலான தொழில் முதலீடுகளில் இந்தியா எடுத்துள்ள விஸ்வரூபம் அந்நாட்டுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

லத்தின் அமெரிக்க நாடுகள் மத்தியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்கள் வரவேற்பை பெற்றுள்ளன.  தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஈரானில் இந்திய வம்சாவளியினர் சிறந்த வர்த்தகர்களாகவும், செல்வந்தர்களாகவும் உள்ளனர்.  இவர்களால் இந்த நாடுகள் இந்தியாவின் நட்பு நாடுகளாக மாறி உள்ளன. இது அமெரிக்காவுக்கு எரிச்சலை மூட்டியுள்ளது.

ஈரானில் இந்தியா குத்தகைக்கு எடுத்துள்ள சபாஹர் துறைமுகம் ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி ஒட்டுமொத்த மத்திய ஆசியாவுக்கும் நுழைவு வாயிலாக உள்ளது. இந்தப் பகுதிகளில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க சீனாவும், அமெரிக்காவும் முயற்சித்து வரும் நிலையில் இந்தியா சத்தமே இல்லாமல் இதனை சாதித்துள்ளது.

இந்த சாதனையில் அதானி நிறுவனமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இலங்கை, வங்கதேசம் மற்றும் கென்யாவில் மிகப்பெரிய வளர்ச்சி திட்டப்பணிகளில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பெங்களூர்,  ஹைதராபாத்  போன்ற பெரு நகரங்களின் வளர்ச்சியை தொடக்கத்தில் கண்டு கொள்ளாத அமெரிக்கா, தற்போது வியந்து பார்க்கிறது. இந்த நகரங்கள் சர்வதேச அளவில் தங்களுக்கு போட்டியாளர்களாக மாறியுள்ளதை கண்டு அமெரிக்கா அஞ்சுகிறது எனவும் ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் வெளிப்பாடாகத்தான் அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதே கருத்தினை ரஷ்யாவில் வெளியாகும் பல ஊடகங்கள் வெளியிட்டு அமெரிக்கா மீது புகார் கூறி உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top