இந்த அரசியல் பயணத்தில் மோடி கால் வைத்திருக்கும் மூன்றாம் இடம், கயானா.
அங்கே Caribbean Community (CARICOM ) எனப்படும் கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பில் மோடி பங்கேற்கின்றார். இந்த அமைப்பில் சுமார் 15 நாடுகள் உள்ளன. இவை மிகச்சிறிய தீவு நாடுகள். ஆனால் முக்கியமான இடத்தில் இருக்கும் இயற்கை வளமான நாடுகள்.
கொலம்பஸ் 14ம் நூற்றாண்டில் இந்தியாவினை தேடி அலைந்த போது வழிமாறி சென்று அடைந்த இடம் அமெரிக்க கண்டம். ஆனால் அவர் நேரடியாக அங்கே கால்வைக்கவில்லை அதன் முன்பக்கம் முகப்பாக இருந்த தீவுகளைத்தான் அடைந்தார், அதன் பின் சென்றவர்கள் மொத்த கண்டத்தையும் ஆக்கிரமித்தார்கள்.
அப்படி அமெரிக்கா, கனடா என வட அமெரிக்கா பிரிட்டிஷ் கைக்கும், தெற்கே பிரேசில் முதல் அர்ஜென்டினா சிலி வரை போர்ச்சுக்கல் ஸ்பெயின் கைக்கும் சென்றது.
இந்த சிறிய தீவுகளை மாறி மாறி ஐரோப்பியர் வைத்திருந்தார்கள். இந்த தீவுகள் வளமானவை, கடல்வளம் ஓயாத மழை என மிக வளமானவை என்பதால் கரும்பு, வாழை , தென்னை, புகையிலை என உலகிற்கு அள்ளி அள்ளி கொடுத்து வருகின்றன.
அப்போது உலகெல்லாம் இருந்து ஆட்கள் கொண்டு குவிக்கபட்டனர். அதில் ஆப்ரிக்கர்கள், இந்தியர்கள் என பலர் உண்டு. இந்த தீவுகள் பின்னாளில் குட்டி குட்டி தேசங்களாயின. அப்படி 15 தேசங்கள் கொண்ட அமைப்பு இது. அந்த மர்மமான பெர்முடா எல்லாம் இந்த பக்கம் தான் வரும்.
இந்த அமைப்பினை கண் அசைவில் ஆட்டி வைக்கும் தேசம் அமெரிக்கா. காரணம் உலகெல்லாம் பெரும் எதிரிகளை கொண்ட தேசம் தன் காலடியில் கவனமாய் இருக்கும்.
இந்த அமைப்பில் சேராத நாடு கியூபா. அதைத்தான் சோவியத் வளைத்து 1962ல் தன் ஏவுகணை தளத்தை நிறுவ முயன்று பின் கென்னடியின் சீற்றம் காரணமாக பின்வாங்கிற்று. பதிலுக்கு சில பொருளாதார தடைகளை சில இடங்களில் அமெரிக்கா தளர்த்தியது.
அந்த அளவு முக்கியமான பார்வையினை அமெரிக்கா இந்த அமைப்பின் மேல் வைத்திருக்கும். இந்த கரீபிய கூட்டமைப்பின் மாநாட்டில் தான் மோடி கௌரவிக்கபட்டிருக்கின்றார். கயானாவின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் நடைபெறும் இந்த மாநாட்டில் அந்த 15 நாடுகளும் மோடியினை கொண்டாடுகின்றன.
இங்கு அரசியல் உண்டு, உலக போட்டி உண்டு, இன்னும் மிக மிக நுணுக்கமான குழப்பங்கள் உண்டு. அதாவது ரஷ்யாவோ, சீனாவோ எளிதில் நுழைய முடியாது. கியூபா போல பெரும் குழப்பத்தை சந்திக்க இந்த அமைப்பு விரும்புவதில்லை.
இதனால் எல்லோருக்கும் பொதுவான வல்லரசு தான் அவர்களின் விருப்பம். அப்படி அவர்களுக்கு பொருத்தமான நாடு இந்தியா, விருப்பமான தலைவர் “எல்லோர்க்கும் நல்லார்” மோடி.
இந்த நாடுகளுக்கு கொரோனா காலத்தில் மருந்தும் நிதியும் உணவுபொருளுமாக அள்ளி கொடுத்த நாடு இந்தியா. இன்னும் அடிக்கடி அவை இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் போது இந்தியா பெரும் உதவி செய்யும். இதனால் இந்தியா அவர்களுக்கு நன்றி உள்ள நாடு
அந்த நன்றியில் தங்கள் மாநாட்டுக்கு மோடியினை அழைத்திருக்கின்றார்கள், கயானா அதிபர் இர்பான் அலி மோடியினை கொண்டாடி வரவேற்றார். இப்போது அந்த 15 தேசங்களில் ஒன்றான டோம்னிகா நாடு தங்கள் உயரிய உருதான “ஹானர் ஆப் டோம்னிகா” எனும் விருதை வழங்கியுள்ளது.
கொரோனா காலத்தில் தங்களுக்கு பெரும் பலமாக நின்ற தேசம் என அந்த விருதை வழங்குகின்றது டோம்னிகா அரசு. அதன் அதிபர் சில்வானி பர்ட்டன் அந்த விருதை மோடிக்கு வழங்கினார்.
மோடி எனும் அந்த பெருமகன் அப்போதும், இது இந்திய மக்களுக்கான விருது, அந்த கோவிட் மருந்து இந்திய மக்களின் வரி பணத்தில் உருவானது எனும் பொருள்படும் படி “140 கோடி இந்திய மக்களின் சார்பாக விருதை பெற்றுகொள்கின்றேன்” என பணிவுடன் சொல்லி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அங்கு தெய்வமென கொண்டாடபடுகின்றார் மோடி மகான். ஆக இந்திய தமிழர்களே மத்திய அரசு உங்கள் பணத்தை ஜிஎஸ்டி என உறியவுமில்லை, திமுக கூட்டணி கட்சிகள் சொல்வது போல் பெரும் பணத்தை சுருட்டவுமில்லை.
மாறாக இவை இப்படி நம் பணம் இப்படி அதிமுக்கிய காரணங்களுக்கு பயன்படுகின்றது. இவை வெறும் நன்கொடை என பாரத அறம் மட்டுமல்ல, இனி அங்கெல்லாம் இந்திய தொழில்களுக்கு வாய்ப்பு பெருகும் அவை அன்னிய செலாவணி என இந்தியாவுக்கு வரியாகவும் இன்னும் வருமானமாகவும் வரும். அதை கொண்டு ஏகப்பட்ட மக்கள் நலதிட்டம், பாதுகாப்பு, மருத்துவம் என நாம் நம்மையும் நம் தேசத்தையும் வளபடுத்த முடியும்.
இந்த பெரும் தேசமுன்னேற்ற மகத்தான காரியத்தின் ஒரு சாட்சிதான் அங்கே கரீபியன் கூட்டமைப்பில் கிடைக்கும் தேச கௌரவமாக கண்முன் நிற்கின்றது, அதையும் அந்த மகான் நாட்டு மக்களுக்கே திருப்பி தருகின்றார்.
அந்த வராது வந்த மாமணிக்கு தேசம் வாழ்த்துகளை உலகத்தோடு சேர்ந்து தெரிவிக்கின்றது. ஜப்பான் முதல் கரீபியன் தீவுகள் வரை அம்மனிதனை புரிந்து கொண்டாடி தீர்க்கும் நேரம், அதுவும் இஸ்லாமிய நாடுகளே அவரை முழுக்க ஏற்று கொண்டாடும் நேரம் இந்தியாவில் சிலர் அவரை புரிந்துகொள்ளாதது சோகம். விரைவில் அவர்களும் மோடியினை புரிந்து கொள்ள பிரார்த்திப்போம்.