எப்பிஐ (FBI )என்று அழைக்கப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலகின் மிகவும் வலிமையான உளவு அமைப்புகளில் சிறந்ததாக கருதப்படுவது, அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பாகும். இந்த அமைப்பு உலகில் உள்ள எதிரி நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என அனைத்து நாடுகளையும் 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டிருக்கும் பணியை செய்து வருகிறது. ஆங்காங்கு உலகில் நடக்கும் போர்களை கண்காணிப்பதற்கும் தேவை எனில் கட்டுப்படுத்தவும் செய்வது தான் இந்த அமைப்புக்கான முழு நேரப்பணி.
இதன் தலைவராக இருப்பவரின் அதிகாரங்கள் வலிமை படைத்தது ஆகும். இந்த நிலையில் எப்பிஐ இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். டிரம்பின் கடந்தகால அதிபர் பதவியின்போது படேல் பாதுகாப்பு, உளவுத்துறையில் முக்கிய பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.