Close
ஏப்ரல் 3, 2025 4:29 காலை

கோமாளி கூத்து ஆரம்பம்..!

டொனால்ட் டிரம்ப்

டாலர் மட்டும் பயன்படுத்தனும்.. பிரிக்ஸ் நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்தக் கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும். அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top