இந்துக்களை பாதுகாக்க இந்தியா படையெடுத்து பங்களாதேஷை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது சரியான தீர்வு இல்லை.
பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, உடனடியாக உள்ளே புகுந்து அடிக்க வேண்டும் என பேசுபவர்கள், ஒரு முறை பங்களாதேஷ் சூழலை கவனியுங்கள்.
பங்களாதேஷின் மொத்த மக்கள் தொகை 17+ கோடிகள்.
ஹிந்துக்கள் கிட்டதட்ட 1.3 கோடி மக்கள்.
இவர்கள் யாரும் ஒரே பகுதியில் குவிந்திருக்கவில்லை. பங்களாதேஷ் முழுவதும் பரவி உள்ளனர். சில பகுதிகளில் 8%க்கும் குறைவாக உள்ளனர். இவர்களை காப்பாற்ற உள்ளே செல்வது எளிதான காரியம் அல்ல. இவர்களை தங்கள் வீடு வாசல் சொத்துகளை விட்டு ஒரு பகுதியில் குவிப்பதும் முடியாத காரியம்.
பங்களாதேஷ் இந்துக்களில் பலர் இந்தியா தலையிடவேண்டாமென்று கூட சொல்கின்றனர். அவர்கள் மீது திணிக்கப்படும் வன்முறையின் தீவிரம் தான் காரணம். தங்கள் சொத்துகளை விட்டு அகதியாக வெளியேற யாருக்குத்தான் மனம் வரும்?
சர்வதேச அரங்கில் ஐநா மூலமாக மட்டுமே அங்கு படைகளை நிறுத்த முடியும். ஐநா சபை எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
ஒரு பகுதியில் இந்திய ராணுவம் நுழைந்தால், குறைவான மக்கள் தொகை உள்ள பகுதிகளில் கலவரம் பெரிய அளவில் வெடிக்கும், அதற்கு யார் பொறுப்பேற்பது. 1971ல் சற்றேறக்குறைய எல்லா மக்களும் இந்திய ராணுவத்திற்கு உதவினர். இன்றைய நிலையில் அது சாத்தியமல்ல.
ஆனால் சில வலுவான விஷயங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது என்பது உறுதி. அது காலப் போக்கில் மட்டுமே தெரியவரும். இதற்கெல்லாம் தீர்வு இந்துக்கள் ஒருங்கிணைவது. எந்த நேரமும் போலீஸ், ராணுவம் வந்து காப்பாற்றும் என்று உட்கார்ந்திருந்தால், இதெல்லாம் தவிர்க்க இயலாது.