மீண்டும் ஷேக் ஹஸீனா பிரதமராகிறார்? இந்திய உறவை மோசமாக்க பங்களாதேஷ் ராணுவம் சதி செய்து வருகிறது.
டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவால் பிரதமரை தூக்கி எறிந்து தனது பேச்சை கேட்கும் ஒருவரை பதவியில் அமர்த்தியது பங்களாதேஷ் ராணுவம். அதற்கு நன்கு தெரியும் இந்தியா அதன் ஆதிக்கம் மூலம் பிரதமராக அவரை மீண்டும் அமர்த்தும் என்று.
அதனால் அவரை பங்களாதேஷின் எதிரிபோல ஆக்க முயற்சி செய்தது. ஓரளவு அதில் வெற்றி பெற்றாலும், முற்றும் முடியாமல் போக இந்தியா ஹஸீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரியது. எதுவும் நடக்கவில்லை.
அந்த சூழலில் ஷேக்ஹசீனாவிற்கு ஆதரவு தர சீனா உட்பட எந்த நாடும் முன் வரவில்லை. இந்தியா மட்டுமே உதவியது. இதற்கு காரணமாக இருந்த அமெரிக்கா அரசில், குறிப்பாக ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி முடிவுக்கு வந்து, ட்ரம்ப் பதவி ஏற்கிறார்.
எனவே பங்களாதேஷ் ராணுவ தளபதி டர்ர்.. ஆகி விட்டார். அவர் இந்தியாவிற்கு ஷேக் ஹஸீனாவை தவிர அதே கட்சியை சேர்ந்த வேறு ஒருவரை பிரதமராக்க தூது அனுப்பினார். தனக்கு சாதகமானவரை பதவியில் அமர்த்தி தானும் பதவியில் தொடர்வது அதன் நோக்கம். ஆனால் இந்தியா அதை நிராகரித்து விட்டது.
அதன் விளைவாக இந்துக்கள் மீதான வன்முறையை தூண்டியது. இந்து தலைவர்களை கைது செய்தது. இந்த சூழலில் ராணுவ தளபதிகள் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததால் சீனாவும் பங்களாதேஷிற்கு எதிராக கைவிரிக்க, இப்போது தப்பி ஓடி தஞ்சம் புக காத்திருக்கிறார்கள் இன்றைய ராணுவ தளபதியும், புதிய பிரதமரும்.
அதன் விளைவாக ஒரு பெரிய கலவரத்தை விதைக்க முயற்சி செய்கிறது. அங்கே இந்துக்கள் பலர் வசதியாக வாழ்கிறார்கள். அவர்கள் சொத்துக்களை குறிவைத்து தாக்க தூண்டி வருகிறது.
அதை தொடர்ந்தால் மின்சாரம், மருந்து, உணவுப்பொருள் உற்பட பல விஷயங்களை கட் செய்து விடுவோம் என்ற எச்சரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. அதை ஆரம்பித்துவைத்த மாணவர் தலைவர்களுக்குள் பெரும் சண்டை.
இதற்கிடையில் ராணுவத்தில் உள்ள அடுத்த கட்ட ராணுவ தலைவர்கள் மூலம் அவர் கொல்லப்படலாம் என்று கூட எதிர்பார்ப்பதால், அடுத்து வரும் ஒரு மாதம் பங்களாதேஷுக்கு திக், திக் மாதம்.
இதன் மூலம் பிரிந்து கிடந்த இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய சக்தியாக மாறி விட்டார்கள். இந்தியாவிற்கு இணையாக (திருப்பூருக்கு போட்டியாக) நன்கு வளர்ந்த துறைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மின்சாரம் வாங்கிய கடனைக்கூட கட்ட காசு இல்லை.
அதன் முடிவில் மீண்டும் ஷேக் ஹஸீனா பதவி ஏற்பார். அது ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னரா, முன்பேவா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. முன்பு சீனா பக்கம், இந்தியா பக்கம் என்று இரு பக்கமும் கண்ணாமூச்சி காட்டிய ஹஸீனா, இதற்கு பின்னர் இந்தியாவிடம் முழுவதுமாக சரண்டர் ஆக வேண்டியிருக்கும். அதனால் நாரதர் கலகம் போல, கெட்டவையும் இந்தியாவிற்கு சாதகமாகவே நடக்கிறது.
அதனால் இந்தியா வல்லரசு ஆகப்போகிறது என்பது வடிகட்டிய பொய். ஏற்கெனவே இந்தியா வல்லரசு ஆகி விட்டது என்பதே மெய் என்று புடின் சொன்னது ஞாபகம் வருகிறதா?
நன்றி : முரு. தெய்வசிகாமணி