Close
டிசம்பர் 12, 2024 4:44 மணி

டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்க டாலருக்கு எதிராக புதிய கரன்சியை வெளியிடும் நாடுகளுக்கு 100 சதவீத வரிகள் விதிக்கப்படும். டாலருக்கு பதிலாக மாற்று திட்டத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். டாலருக்கு எதிராக மாற்றுக்கரன்சி உருவாக்குவதில்லை என்பதை பிரிக்ஸ் நாடுகள் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் டிரம்பின் எச்சரிக்கையைத்  தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், ‘அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் டாலருக்கு எதிராக எந்த புதிய கரன்சியையும் உருவாக்கவில்லை. டாலர் கரன்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை. பிரிக்ஸ் கரன்சி குறித்த செய்திகள் எதற்காக வெளியாகி உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தியா டாலரின் மதிப்பை குறைக்கும் வேலையில் ஈடுபடவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இவ்விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கு கருத்தியல் ரீதியாக எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு என்று தனியாக சொந்த கருத்தை கொண்டிருக்கலாம்’ என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top