உலகில் தரமான சாலைகள் கொண்ட நாடுகளில் இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது.
உலக அளவில் சாலைப்போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகநாடுகள் அனைத்தும் தரமான சாலைகள் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற்ன. இந்தியாவில் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலேயே தங்க நாற்கரம் என்ற நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து பா.ஜ.க., ஆட்சிகளில் சாலை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இந்தியா உலக அளவில் இன்று சாலை மேம்பாட்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அதாவது உலகின் மிகப்பெரிய ‘Highway Network’ கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை முந்தி 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 1,44,955 கி.மீ தூரத்திற்கு இந்தியா அரசு தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த லிஸ்டில் முதலிடம் பிடித்த சீனா 1,77,252 கீ.மீ நீளத்திற்கும், அமெரிக்கா 1,05,948 நீளத்திற்கும் நெடுஞ்சாலைகளை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் சாலை மேம்பாட்டு பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவில் சாலை மேம்பாட்டில் உலக அளவில் முதலிடத்தை பெற்றுவிடும் எனவும் உலக நிபுணர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.