Close
டிசம்பர் 18, 2024 9:08 காலை

‘எங்களுக்கு வரி விதித்தால் நாங்களும் வரி விதிப்போம்’ : டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!

டொனால்டு டிரம்ப்

எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக முறைப்படி பொறுப்பு ஏற்க இருக்கிறார். அதிபராக வெற்றி பெற்ற அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து அனுமதிகளும் எளிதில் கிடைக்கும் என்று டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ‘எங்களுக்கு வரி விதித்தால், நாங்களும் வரி விதிப்போம்’ என்று அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எச்சரிகை விடுப்பதுபோல கூறியுள்ளார்.

இது குறித்து ஒரு மாநாட்டில் பேசிய டிரம்ப்,

‘சில அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகம் விதிக்கப்படுகிறது. அதிக வரி விதிக்கும் நாடுகளில் அமெரிக்காவும், பிரேசிலும் இருக்கிறது. அதிக வரி விதித்தால், நாங்களும் பதிலுக்கு வரி விதிப்போம்.

எல்லா நிலைகளிலும் எங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. நாங்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் ரூ. 100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள். இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறது. தொடர்ந்து அதிக வரி விதிக்கப்பட்டால் நாங்களும் இந்தியாவுக்கு பரஸ்பர வரி (reciprocal tariffs) விதிக்கும் சூழல் ஏற்படும்.’ இவ்வாறு டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top