Close
டிசம்பர் 23, 2024 7:12 மணி

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்..! மக்கள் அலறியடித்து ஓட்டம்..!

நிலநடுக்கம்- கோப்பு படம்

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு பதற்றத்துடன் வெளியே ஓடினார்கள்.

நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக நிலநடுக்கம் பதிவானது.

வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்து தெருக்களில் குவிந்தனர். என்ன நடக்கிறது என்பதை உணரமுடியாமல் பதற்றத்தில் அவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது. பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏதேனும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 157 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top