Close
டிசம்பர் 24, 2024 7:39 மணி

இந்தியாவுடன் நட்பு : சீனா இறங்கி வந்தது ஏன்?

இந்தியா-சீனா உறவு -கோப்பு படம்

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்து விட்டது.

அதாவது எப்படியாவது இந்தியாவிற்கு வேறு பிரதமர், குறிப்பாக ராகுல்காந்தி பிரதமராகி விடமாட்டாரா என இலவுகாத்த கிளியாக காத்திருந்தது சீனா. இது சீனாவின் 10 ஆண்டு கால காத்திருப்பு.

அதற்காக சீனா தனது ஏஜெண்டுகளை இந்தியாவின் பல பகுதிகளில் நியமித்து அதற்கான வேலைகளை தொடங்கி பல ஆண்டுகள் வேலை செய்தது. காலிஸ்தான் பிரச்சனை, விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் பல தரப்பட்ட போராட்டங்கள் இந்தியாவில் நடப்பதற்கு சீனா காரணமாக இருந்தது. மில்லியனர், பணக்காரர்கள் என சீன விசுவாசிகள் அனைவரும் வந்து டெல்லியை ஆக்கிரமித்து இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடத்த வேலை பார்த்தனர்.

இந்திய எல்லையில் இந்திய பகுதிக்கு சீன பெயர் வைத்தல், காஷ்மீரில் குழப்பம் செய்தல் என பல வேலைகளை சீனா செய்து பார்த்தது. இருந்தாலும் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர சீனாவால் முடியவில்லை.

அதாவது மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற முடியவில்லை. இந்தியாவில் அரசியல் செய்ய வெளிநாட்டில் இருந்து ஒருவன் சொல்லி கொடுத்து தான் பண்ண வேண்டிய நிலையில் இங்கிருக்கும் அரசியல்வாதிகள் உள்ளனர்.

எனவே இனி வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த சீனா மோடியுடன் சமரசத்திற்கு தயாராகி விட்டது. காரணம் இப்படி எல்லாம் செய்த சீனாவுக்கு மோடியின் நகர்வு இடி மாதிரி விழுந்து அதன் பொருளாதாரத்தை காலி செய்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவும், சீனாவும் ஏறத்தாழ ஒரே காலத்தில் தான் விடுதலை அடைந்தன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இரு நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

சீனா மிகப் பெரிய வல்லரசு ஆகி விட்டது. நாம் மிகவும் பின் தங்கி விட்டோம். நம்மை ஆண்ட காங்கிரஸ் நாட்டை வளர விடாமல் வைத்திருந்தது. நேரு காலம் முதல் மன்மோகன் காலம் வரை காங்கிரஸ் ஆண்ட காலத்தில் இந்தியா இறக்குமதியை தவிர எதையும் கண்டதில்லை.

ஈரான் பணம் இல்லை என்றால் உங்களுக்கு பெட்ரோல் இல்லை என்று இந்தியாவை பார்த்து சொல்லிய காலம் எல்லாம் வந்தது. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் போர் என்று ஒன்று வந்தால் இந்தியாவிடம் இருக்கும் ஆயுதங்கள் 4 நாளைக்கு கூட தாங்காது என்று சொல்லிய காலமும் இருந்தது.

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது. குட்டி நாடான இலங்கை எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் இந்தியாவால் ஒரு கண்டனம் கொடுக்க கூட முடியாத சூழல் இருந்தது.

மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கிறது. இந்திய பாதுகாப்பு படைகள் மிக, மிக பலம் பெற்று விட்டன. யாரும் தொட முடியாத பலத்தை இந்திய பாதுகாப்பு படைகள் பெற்று விட்டன. Make in India திட்டம் மிக பெரிய வெற்றியாகி விட்டது.

ஆனாலும் இன்று உலக பொருளாதாரத்தில் சீனா தான் முதல் இடத்தில் இருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் உற்பத்தியில் சீனா காட்டும் வேகம் உலக நாடுகளை மிரள வைத்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் உலகில் சீன பொருட்களுக்கான சந்தை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கொண்டு வருகிறது. காரணம் இந்திய பொருட்களுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது.

உதாரணம், செல்போன் ஏற்றுமதியில் உலகின் 2 நாடாக இந்தியா திகழ்கிறது. சீனா முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

சீனாவிடம் ராணுவ தளவாடங்கள் ஆர்டர் கொடுத்த 7 நாடுகள் அந்த ஆர்டரை ரத்து செய்து இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளது சீனாவில் முகத்தையே மாற்றி விட்டது. மேலும் 3 நாடுகள் சீனாவிடம் கொடுத்த ரயில் ஆர்டரை ரத்து செய்து இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளது.

இன்னும் நிறைய எழுதலாம். சீனாவில் கடைசி எரிச்சல் மிக பலமானது. அதாவது இந்தியா பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ததை சீனாவால் தாங்கமுடியவில்லை.

இந்தியா ஃபிலிப்பைன்ஸ் இடையேயான பாதுகாப்பு உறவு எந்தவொரு மூன்றாவது நாட்டையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது என வலிக்காமல் கூறியுள்ளார் சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் வூ கியான்.

அந்த அளவு இந்தியாவின் வளர்ச்சி சீனாவை ஆட்டி வைத்து விட்டது. இந்தியா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலமாக பிலிப்பைன்ஸிற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இனி விஷயத்திற்கு வருவோம்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடையே இருக்கும் கம்யூனிச அலர்ஜிதான் சீனாவின் பின்னடைவிற்கு முக்கிய காரணம். சீனாவின் தயாரிப்புகளை இந்த நாடுகள் பெரிய அளவில் புறக்கணித்து வருகின்றன. எனவே புதிய சந்தையை சீனா தேடி வருகிறது. ரஷ்யாவும், ஆப்பிரிக்காவும் தற்போதைய சந்தைகளாக சீனாவுக்கு இருக்கின்றன. ஆனால் இதனுள் இந்தியாவும் புகுந்து விட்டது. அதனால் சீனாவின் லாபம் சுருங்கி விட்டது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பத்தாது. இன்னும் பெரிய சந்தை தேவைப்படுகிறது. அதுதான் இந்தியா. இந்திய சந்தையை கைப்பற்ற சீனா தீவிரமாக முயன்று வருகிறது. அதற்கு மோடியுடன் சமாதானமாக போவதை தவிர வேறு வழியில்லை.

2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் சீன நிறுவனங்கள், மற்றும் அநேக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மோடி அரசாங்கம் தடைவிதித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை கடுமையாக பாதித்தது.

அதன் பிறகு பெரிய அளவில் இரு நாட்டின் தலைவர்கள் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. எனவே ராணுவ பிரச்னைக்கு தீர்வு காண சீனா முன்வந்தது. இனி இது போன்று நடக்காது என்றும், ராணுவ தளபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில்தான் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் பெய்ஜிங்கில் சந்தித்தனர். இப்படியான உரையாடல் கடந்த 2019 டிசம்பரில் கடைசியாக நடந்தது. அதன் பின்னர் இப்போது தான் நடக்கிறது.

இதனிடையே “இந்தியாவுடனான புரிதலை அதிகரிக்கவும், அதன் நலன்களை மதிக்கவும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். தொடர் உரையாடல்கள் தான் இரு நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்தும்.

வேறுபாடுகளை கலைந்து இரு நாட்டின் உறவுகளை சிறப்பாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான்  சீனாவிலிருந்து வெளி வரும் ‘‘குளோபல் டைம்ஸ்” நாளிதழில் இதனை தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top