Close
டிசம்பர் 25, 2024 9:25 மணி

கஜகஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளாகி 42 பேர் உயிழப்பு..? இழப்பு கூடலாம் என அச்சம்..!

நொறுங்கிக்கிடக்கும் விமானம்

கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யா நோக்கி 72 பேரை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அவ்வாறு சென்ற பயணிகள் விமானம் கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரியவந்துள்ளது. அந்த விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பாக பலமுறை வானில் வட்டம் அடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

விமானி விமானத்தை விபத்தில் இருந்து காப்பாற்ற நீண்ட நேரம் போராடினார் என்றும் தங்கள் வெளியாகியுள்ளது. ஆனாலும் விமானியின் முயற்சியால் விபத்தில் இருந்து விமானத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் என்று மொத்தம் 72 பேருடன் அந்த விமானம் சென்றது. அந்த விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்து போயிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.

தற்போது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது குறைந்தபட்சம் 42 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top