கூடுதலாக 41 நாட்கள்
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் 2024-ல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
ஐரோப்பாவின் காலநிலை கணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ், 2024ம் ஆண்டு தான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு. மேலும், இந்த ஆண்டு தான் முதன்முறையாக தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப நிலையைக் பதிவாகியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு உலகளவில் 41 நாட்கள் அதிக வெப்பமான நாளாக அமைந்தன. இதுவே கடந்த ஆண்டு 26 நாட்களாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. வேர்ல்டு வெதர் ஆட்ரிப்யூஷன் (World Weather Attribution (WWA) மற்றும் க்ளைமேட் சென்ட்ரல் ( Climate Central ) மேற்கொண்ட ஆய்வில், காலநிலை மாற்றத்தால் உலகளவில் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.