Close
ஜனவரி 22, 2025 1:03 மணி

மீண்டும் வந்து விட்டார் டிரம்ப்! அடுத்து உலகில் என்ன நடக்கும்

டொனால்டு டிரம்ப்

இனி நான்கு ஆண்டுகளுக்கு பேசும் பொருளாக போகும் விஷயமாக டிரம்ப் மாறுவார் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தனக்கு கௌரவமான ஓய்வு தேவை என்கிறார் விடைபெற்ற ஜோ பைடன். யாரும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. ஆனபோதிலும் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர் அதிரடிக்கு பெயர் பெற்றவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். கனடா தனது 51 வது மாகாணம் என்றவர் கிரீன்லாந்து ஏன் முரண்டு பிடிக்கிறது என சீரியஸாக கேட்டு கொண்டு இருக்கிறார்.

அவரது முந்தைய ஆட்சி காலத்தில் இதேபோன்ற ஒரு ஜனவரி மாதத்தில் ஈரானிய ஜெனரல் காஸிம் சொலைமானியை ஜஸ்ட் லைக் தட் என்பது போல் கொல்ல உத்தரவிட்டார். அமெரிக்க சிஐஏவால் பாக்தாத்தில் வைத்து அத்தனை துல்லியமாக தனது ஆளில்லா விமானம் மூலம் கொல்ல முடிந்தது . அங்கு அமெரிக்காவில் பல உளவு அமைப்புகள் உண்டு. உள்நாட்டில் ஒன்று வெளிநாட்டிற்கு ஒன்று… பொதுவாக நாட்டின் நலன் சார்ந்த ஒன்று என ஏகப்பட்ட குழுக்கள் உள்ளன.

அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் இவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதை அப்பட்டமான காட்டிக் கொடுக்க சீர் செய்து விட்டனர். இதில் அமெரிக்க அதிபராக வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்தாற்போல் ஒவ்வொரு வகையறாவை கையாளக் கூடியவர்களாக இருப்பர்.

இதில் தான் தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ள ட்ரம்ப் சில நுணுக்கமான மாறுபாடுகளை கொண்டு வந்திருக்கிறார் எனலாம்.

டொனால்ட் ட்ரம்ப் பார்வையில் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் அரேபியர்களும் உண்டான புரிதல் நுட்பமானது. அவர் அளவில் பயங்கரவாதிகள் வேறு, அரேபியார்கள் வேறு என்பதில் தெளிவாக இருக்கிறார்.

சவூதி முடி இளவரசராக முகம்மத் பின் சல்மான் இருந்த சமயத்தில் ஒரு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் தூதரகத்தில் வைத்தே கொல்லப்பட்டார். இதில் நேரிடையாக சவூதி அரேபியாவின் முடி இளவரசரை குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதிலிருந்து வெளிவர அன்றைய அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் துணை நின்றார்.

அதே சமயம் ஹௌதி மற்றும் ஹமாஸ் மீது கொஞ்சமும் டிரம்ப்புக்கு கரிசனம் இருந்ததில்லை. ஹவுத்திகளுக்கோ டிரம்ப்  தற்போதும் சிம்ம சொப்பனம் தான்.

இந்த ஆட்சி காலத்தில் என்ன செய்வார் ஏது செய்வார் என்பதை இன்னமும் யாராலும் அனுமானிக்க முடியவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில். அது தான் ட்ரம்ப்.

ஆனால் மற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதில்லை அல்லவா. ஈரான் தனது தலைநகர் டெக்ரானை மாற்றுகிறது. இஸ்ரேல் ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் என்கிறார்கள். ஏமனிலோ புதிய விமான ஓடுபாதையே நிர்மாணித்து வைத்திருக்கிறார்கள்.

துப்பாக்கி ஏந்திய இனக் குழுக்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று உருமியிருக்கிறாராம் ட்ரம்ப். இது சாத்தியமா என்பதை விட அவருக்கு இது கடைசி ஆட்சி காலம். அவருக்கு அடுத்த படியாக அவருடைய மூத்த மகனை அரியணையில் ஏற்றிச் பார்க்க ஆசை வைத்து இருக்கிறார் போலிருக்கிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள். அதற்கு தோதாக அவரும் நிறையவே செய்திருக்கிறார்.

மத நல்லிணக்கத்தை கட்டிக் காக்கிறாரோ இல்லையோ, மத்திய கிழக்கு நாடுகளில் நல்ல நட்புறவு ஏற்படுத்தி பராமரித்து வருகிறார். விளாடிமிர் புடினோடு பெரிய அளவிலான முரண்பாடு இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

பல சீன நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார். மருந்து மாஃபியா முதல் போதை லாகிரி வஸ்துக்களின் கடத்தல்காரர்களை வரை அத்தனையும் அத்துப்படியாகி இருக்கிறது.

இவரது குண நலன்களுக்கு ஏற்ப டொனால்ட் ட்ரம்ப் செயல்பட கூடும். அல்லது அவரின் முகமூடியாக ட்ரம்ப் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அதற்கேற்ப அவரது அமைச்சரவை சகாக்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

சொல்லி வைத்தார் போலே அத்தனை பேரும் இவருக்கு சம வயதுடையவராக இருப்பவர்கள் தான் முக்கிய பொறுப்புகளில் வருகிறார்கள். இதனால் என்னவெல்லாம் நடக்கும்? அல்லது எதற்கெல்லாம் முக்கியத்துவம் கிடைக்கும்?

தற்போதைய தலைமுறையினரை ஜென் ஆல்பா என வகைப்படுத்தியிருக்கிறார். 2025 முதல் 2040 வரை உள்ள இளம் வயதினர் மற்றும் இந்த ஆண்டில் பிறக்கின்ற குழந்தைகளை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு இயங்கும்.

ஐரோப்பாவில் பரவி வரும் இஸ்லாமியர்களை கட்டுப்படுத்த அத்தனையும் செய்ய இருக்கிறார்கள். அகதிகளாக குடியேறியவர்கள் இன்று இங்கிலாந்தை அசைத்து சாய்த்து இருப்பதை கவனித்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை ஓசையின்றி முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கை ஓங்க, ஒட்டோமான் பேரரசை மீண்டும் நிலைநிறுத்தியே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்த துருக்கி அதிபர் ரெசிப் தையுப் எர்துவானின் நிலை தான் கவலைக்கிடமாக மாறி நிற்கிறது.

காஷ்மீர் என்றாலேயே முதல் ஆளாக தொடையை தட்டி வந்தவர் இன்று ஆள் அரவமே இல்லை. இதில் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் வேறு….

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இறங்கி அடித்து வருகிறார். ரஷ்ய உக்ரைன் மோதலுக்கு முதல் புள்ளியாக இருந்த டொன்பாஸ் பிராந்தியத்தில் அவரது கை ஓங்கி விட்டது. அவரை பொருத்தவரை ஜோ பைடன் காலத்தில் இதனை செய்து விட்டார்.

உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி கதி என்ன என்பது அவருக்கே பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது போலிருக்கிறது.

அடுத்ததாக இந்தியாவில். இஸ்லாமிய அரசியல் அமைப்புக்கள் அடக்கியே வாசிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் ஓட்டம் பிடிக்க எந்நேரமும் தயாராக இருக்கிறார்.

தேர்தல் என ஒன்று வந்தால் அதில் போட்டியிட்டு வெற்றி பெற அங்கு உள்ள வாக்காளர்களின் வயதை 17 ஆக குறைத்திருக்கிறார். போகாத ஊருக்கு வழி தேடி பலதையும் செய்து விட்டார்.

ஒரு பக்கம் பெய்ஜிங் உருமிக்கொண்டு நிற்கிறது. இடையில் யூனுஸ் இந்தியாவை ஏகத்திற்கும் சீண்டி விட்டார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வருவது முற்றிலும் நம் இந்திய தேசத்திற்கு சாதகமான சூழல் இல்லை  என்றாலும் நம் எதிரிகளை துரித கதியில் நீக்க உதவும். அது ஆப்கானிஸ்தானில் இருந்து அஸ்ஸாம் வரை தற்போதைய முக்கிய தேவையாக இருக்கிறது என்பதால் இந்தியாவின் ஆட்டம் நிச்சயமாக உண்டு எனலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top