Close
ஜனவரி 22, 2025 7:03 காலை

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகிய அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் பெரும் நிதியிழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட பின் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று உள்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரச் சிக்கல்கள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாக செயல்படத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு 2024-25 ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டில் அமெரிக்காவின் நிதி பங்களிப்பாக 662 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அந்நிறுவனம் பெறும் மொத்த வருவாயில் 19 சதவிகிதமாகும்.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகவிருக்கும் உத்தரவில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதால், சர்வதேச அளவில் பல்வேறு நோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top