Close
ஜனவரி 22, 2025 7:01 காலை

டிரம்புடன் டிபன் சாப்பிட ரூ.9 கோடி! சாப்பிட குவிந்த பிரபலங்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஒரு முறை இரவு விருந்து சாப்பிட 9 கோடி ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. உலக பிரபலங்கள்  குவிந்ததால் ஒரே இரவில் ரூ.2 ஆயிரம் கோடி குவிந்தது.

உலகம் முழுவதும் உள்ள கோடீசுவரர்கள் பலரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து சாப்பிட சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் பெரிய தொகையை செலவிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்புடனான இரவு விருந்து நிகழ்ச்சி, ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக அமைந்து விட்டது. இதற்காக, 5 வகையான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. குறைந்தபட்சம் 50 ஆயிரம் டாலர்கள் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரை அவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவரவர் விருப்பத்திற்கேற்ப டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.

இதில், 1 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.9 கோடி ஆகும். அதேவேளையில், டிரம்ப் மற்றும் வான்ஸ் இருவரையும் சந்திக்க பெரிய நன்கொடையாளர்கள் இரட்டிப்பாக தொகையை தர வேண்டும்.

இந்த 1 மில்லியன் டாலர் நன்கொடைக்கு ஈடாக, வான்ஸ் உடன் இரவு விருந்து சாப்பிட 2 டிக்கெட்டுகளும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரம்ப் உடன் இரவு விருந்து சாப்பிடுவதற்கு 6 டிக்கெட்டுகளும் கிடைக்கும். இதற்காக ஏற்கனவே நிறைய பேர் பெரிய தொகையை கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.

இதன்படி, டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பே ரூ.1,700 கோடி வரை பணம் திரட்டப்பட்டுள்ளது. இந்த தொகையானது அவர் பொறுப்பேற்ற அன்று ரூ.2 ஆயிரம் கோடியை எட்டியது.  இதனால், ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு அதிபராகபதவியேற்ற பின் நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் 106 மில்லியன் டாலர் தொகை வசூலானது. அதன் ஓய்ந்னர் பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, 135 மில்லியன் டாலர் தொகை கிடைத்தது. இந்த முறை இந்த தொகை 267 மில்லியன் டாலராக (ரூ.2 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது.

டிரம்புடன் இரவு விருந்து சாப்பிடவும், அவருடன் பேசவும் பெருந்தொகையை அளிக்க வேண்டும் என்றபோதும், உலகின் மிக பெரிய தொழிலதிபர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

எனினும், இந்த தொகையை பயன்படுத்துவது பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஜனாதிபதி நூலகத்திற்கு நிதியுதவி செய்ய இந்த தொகையை டிரம்ப் பயன்படுத்த கூடும் என யூகங்கள் தெரிவிக்கின்றன.

என்னவானாலும், ஒரு நாள் இரவு விருந்தில் இவ்வளவு பெரிய தொகையை டிரம்ப் அள்ளியிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top