Close
ஜனவரி 23, 2025 9:49 காலை

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்..!

துணை அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட கணவனை பிரமிப்புடன் பார்க்கும் மனைவி உஷா

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ்சின் மனைவி உஷாவேன்ஸ் இந்திய வம்சாவளி பெண். அமெரிக்காவில் அதிபர் மனைவியை நாட்டின் முதல் பெண்மணி என்றும், துணை அதிபர் மனைவியை இரண்டாவது பெண்மணி என்றும் அழைப்பது வழக்கம்.

தற்போது துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய பெருமையை பெறுவது இதுவே முதல் முறை.

யேல் சட்டப்பள்ளியில் படிக்கும் போது, வேன்ஸ்- உஷா இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். துணை அதிபர் ஆகும் வேன்ஸ் மனைவி உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

ஆந்திராவின் வட்லுரு கிராமம் தான் அவரது மூதாதையர்களின் பூர்விகம். அமெரிக்காவின் வெள்ளையர் அல்லாத முதல் இரண்டாவது பெண்மணி என்ற சிறப்பை பெறவுள்ளார். துணை அதிபராக இருந்து அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த கமலா ஹாரிஸும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.

அடுத்தது துளசி கப்பாரட். உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பாரட் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர் பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். இப்போது டிரம்பின் ஆட்சிக்குள் மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.

உலகில் உள்ள உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானது அமெரிக்காவின் எப்.பி.ஐ. எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்கும். போர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இந்த அமைப்புக்கு முழு நேர வேலையாக தரப்பட்டிருக்கிறது.

சவாலான பல முக்கிய வழக்குகளையும் எப்.பி.ஐ. கையாளும். இதன் தலைவராக இருப்பவருக்கு அதிகாரங்கள் ஏராளம். இந்த சூழலில் எப்.பி.ஐ., இயக்குனராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலை நியமித்து டிரம்ப் அறிவித்துள்ளார்.

விவேக் ராமசாமியும் அமெரிக்காவின் செயலாக்கத்துறை தலைவராக நியமிக்கப்பட்டு தற்போது பதவி விலகியுள்ளார். அவர் அமெரிக்காவின் ஒரு மகாணத்திற்கு கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் செயலாக்கத்துறை தலைவர் பதவியில் இருந்து வெளியேறி உள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

விர்ஜினியா மாகாணத்தில் இருந்து தேர்வான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஹாஷ் சுப்பிரமணியம், 38, ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்டர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்டு, 43, பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். சுஹாஷ் சுப்பிரமணியம், ஒபாமா அதிபராக இருந்த போது, அவரின் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இவரது தந்தை சென்னையையும், தாய் பெங்களூரையும் சேர்ந்தவர்கள். இதே போல் அமெரிக்காவின் பல பதவிகளில் இந்தியர்கள் ஆளுமை காட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top