Close
நவம்பர் 23, 2024 10:05 காலை

பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மலர்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பாப்பி மலர்

பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மலர் திகழ்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..

சற்று முன் காலாற நடந்து சென்ற போது, கால்பந்தாட்ட மைதானத்திற்கு அருகில் பாப்பி மலர்கள் நன்றாக பூத்து குலுங்க ஆரம்பித்து விட்டன.

பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் இந்த பூக்கள் அதீத வளர்ச்சியில் இருக்கும். முதல் உலக போர் முடிந்த உடன் இங்கிலாந்தில் பார்த்தபோது நாட்டில் பெரும்பாலும் அழிந்து போயிருந்ததாகவும், பாப்பி மலர்கள் மட்டும் அழியாமல் பூத்துக் கிடந்ததாகவும் சொல்கிறார்கள்.

ஆகவே பொறுமைக்கும் சகிப்பு தன்மைக்கும் அடையாளமாக பாப்பி மலர்களை இன்றளவும் இங்கே அடையாளப்படுத்து கிறார்கள். யுத்தம் நடந்த இடத்தில் மனிதர்கள், கட்டிடங்கள் எல்லாம் அழிந்து தரைமட்டம் ஆன வெற்றிடத்தில், பருவகாலம் மாறியவுடன் முதன்முதலாக முளைத்தது இந்தச் செடிகள் என்பதால்.
வாழ்க்கை இன்னும் முடிந்து போகவில்லை, மறுபடியும் வாழ்க்கை இருக்கு’ என்ற நம்பிக்கையைக் கொடுத்தது இந்த மலர்கள் என்கிற நம்பிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.

ஒவ்வொரு வருடமும் பதினொன்றாம் மாதத்தின் பதினொன் றாம் நாளின் பதினொறு மணிக்கு இங்கு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. இது நவம்பர் 11ல் 1918 ஆம் ஆண்டு முதல் உலகப் போரின் முடிவுக்கு சமிக்ஞையாக கையெழுத் திட்டதை குறிப்பதாகும்.

1921 நவம்பர் 11 முதல் பிரிட்டனில் பாப்பி தினம் அனுசரிக்கப் பட்டது என வரலாறு சொல்கிறது..

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top