Close
நவம்பர் 23, 2024 10:41 மணி

பத்தாண்டுக்கு பிறகு எந்த உலோக தேவை இந்தியாவில் அதிகமாகும்?

துத்தநாகம் (கோப்பு படம்)

இன்னும் பத்தாண்டுகளில் எந்த உலோகத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருக்கும் தெரியுமா? படிங்க தெரிஞ்சிக்கங்க.

இப்போது நமக்கு அதிக தேவையுள்ள உலோகம் எதுவென்றால் இலகுவாக தங்கம் என்று சொல்லி விடுவோம்.

ஆனால் உலோகங்களில் பிளாட்டினம் வகையில் உள்ள ரோடியம் தான் மிகவும் மதிப்புமிக்க உலோகம்.இது வெள்ளை தங்க நகைகளில் இறுதி பூச்சுக்கு நகைகளில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி இருக்கும் அதே தாதுவில் இது பிரித்து எடுக்கப்படுகிறது. சிறிய அளவில் மட்டுமே கிடைப்பதால் இதன் மதிப்பு அதிகம்.

அதேவேளையில் அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிக தேவை இருக்கும் உலோகம் எதுவாக இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியுமா என்று உங்களை சோதித்துக்கொள்ளுங்கள். அது என்ன உலோகமாக இருக்கும்? அது என்னவாக இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம் வாங்க.

எந்த உலோகம்?

வெள்ளி போல காட்சியளிக்கும் இந்த உலோகமானது அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிகமான தேவையை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், இதன் விலையானது தங்கத்தை விட பலமடங்கு குறைவாகும்.

பித்தளை, வெள்ளி, அலுமினியம் போன்ற உலோகங்களில் பயன்படுத்தப்படும் துத்தநாகத்தின் (Zinc) தேவையானது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சர்வதேச துத்தநாக சங்கம் (IZA) தரப்பில் கூறுகையில், “அடுத்த 10 ஆண்டுகளில் துத்தநாகத்தின் நுகர்வு 11 லட்சம் டன்னில் இருந்து 20 லட்சம் டன்னாக அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஜிங்க் காலேஜ் 2024 (Zinc College) நிகழ்ச்சியில் IZA நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூ கிரீன் என்பவர் பேசுகையில், “இந்தியாவில் துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது அதன் உற்பத்தியை விட அதிகமாக இருக்கிறது.

தற்போது, துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது 11 லட்சம் டன்கள் ஆகும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் தேவை 20 லட்சம் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் தங்கத்தை விட துத்தநாகத்தின் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் 700 டன்களுக்கும் அதிகமாக உள்ளது.

துத்தநாகத்தை பயன்கள்

பித்தளை, நிக்கல் வெள்ளி மற்றும் அலுமினிய சாலிடர் போன்ற உலோகக் கலவைகளிலும் துத்தநாகம் பயன்படுத்தப்படுகிறது. துத்தநாக ஆக்சைடு வண்ணப்பூச்சுகள், ரப்பர், அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள், பிளாஸ்டிக், மைகள், சோப்புகள், பேட்டரிகள், ஜவுளி மற்றும் மின் சாதனங்கள் போன்ற பல பொருட்களின் உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது மனித உடலிலும் இது கலந்துள்ளது. இது மனித உடலில் பல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இது குறைந்தது 100 வெவ்வேறு நொதிகளின் செயல்பாட்டைத் தூண்ட உதவுகிறது. உடல் ஆரோக்ய நன்மைகளை அறுவடை செய்ய துத்தநாகத்தின் சிறிய உட்கொள்ளல் மட்டுமே அவசியம்.

தற்போது, ​​அமெரிக்காவில் துத்தநாகத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட உணவுக் கொடுப்பனவு (RDA) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 8 மில்லிகிராம்கள் (mg) மற்றும் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 11 mg ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top