ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செவ்வாய் கிரக நவீன நகரம் பற்றி எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ‘‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் தனது தொலைநோக்கு திட்டம் குறித்து பேசினார். செவ்வாய் கிரகத்துக்கு இந்தாண்டில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்கினால் அது எப்படியிருக்கும் என்ற கற்பனை கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
‘செவ்வாய் கிரகத்துக்கு வருக’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒரு நிமிடம், 12 விநாடிகள் ஓடுகிறது. அதில் உயரமான கட்டிடங்களுக்கு இடையே சிறிய ரக விண்கலன்கள், விமானங்கள் வலம் வருகின்றன.
அந்நகரத்தின் கட்டமைப்புகள் எல்லாம் மிக நவீனமாக உள்ளன. சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள இந்த வீடியோவை பல கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.