Close
நவம்பர் 22, 2024 11:37 மணி

தேனி புறவழிச்சாலையில் பறக்கும் பக்தர்கள்… பரிதவிக்கும் வியாபாரிகள்..

தேனி

தேனி மாவட்டத்தில் புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்கள்

தேனி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கு உள்ளே செல்வதைத்தவிர்த்து அருகே  உள்ள புறவழிச்சாலையில்  சபரிமலை பக்தர்களின் வாகனங்கள்  செல்வதால்  வியாபாரிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் என அனைத்து ஊர்களிலும் நான்கு வழிச்சாலை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த புறவழிச் சாலை  வழியாக வேகமாக கடந்து சென்ற விடுகின்றனர். 90 சதவீத பக்தர்கள் எந்த ஊருக்குள்ளும் வருவதில்லை. தேனிக்குள் மட்டும் 10 சதவீதம் பேர், வந்து காலை, மதியம், இரவு உணவினை முடித்து விட்டு செல்கின்றனர். மற்ற ஊர்களுக்குள் செல்வதே இல்லை.

தவிர  புறவழிச்சாலை  ஓரங்களில் தற்போது அதிகளவில் உணவகங்கள் திறக்கப்பட்டு  விட்டன. இதனால் போகும் வழியிலேயே சாப்பாட்டினை முடித்து விடுகின்றனர். இதனால் ஊருக்குள் பக்தர்களை நம்பி அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய பல கடைகளில் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை சீசனில் தேனிக்குள்ளேயே ஓரிரு உணவகங்களைத் தவிர மற்ற உணவகங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பக்தர்கள் புறவழிச்சாலையில் சென்று விடுவதே, வியாபாரம் டல்லடிக்க காரணம் என ஓட்டல் உரிமையாளர்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top