Close
மே 22, 2025 1:08 காலை

நவம்பர் 29ம் தேதி தமிழகம் முழுவதும் பருப்பு மில்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தங்கராஜ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்ட பருப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மத்திய அரசின் GST கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவன கட்டடங்களின் மீது 18% GST வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வருகிற நவம்பர் மாதம் 29-11-2024 வெள்ளிக் கிழமை தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பருப்பு மில்கள்
அனைத்தும் ஒருநாள் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.

நம் கண்டனத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளின்
கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக நாம் அனைவரும் வரும் வெள்ளி கிழமை மில்களை முழுவதும் அடைத்து முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top