Close
நவம்பர் 22, 2024 6:11 மணி

புதுக்கோட்டையில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட மாணவிகள்

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை  ஏராளமான கல்லூரி மாணவிகள்  பார்த்து பயன்பெற்றனர்.

மத்திய மக்கள் தொடர்பாகம் மற்றும் சென்னை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில் மூன்று நாட்கள் நடைபெற்ற மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

மூன்று நாள் நடைபெற்ற இந்த கண்காட்சியின் இன்று நிறைவு நாள் நடைபெற்றது. சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வரும் இந்த வேலையில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த பல்வேறு வீரர்களின் தகவல் மற்றும் புகைப்படங்கள் கடந்த காலத்தை நினைவுபடுத்தும் வகையில்  அமைந்தது.

இந்த கண்காட்சியினை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பார்த்து பயன்பெறும் வகையில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது . இதில் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியினை கண்டுகளித்தனர்.

இது குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், நிறைய சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.  மேலும் தமிழ்நாட்டில் இருந்து போராடிய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாறு மற்றும் புகைப்படங்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தது.

 சுதந்திரத்திற்காக எவ்வாறு பாடுபட்டார்கள் என்பது குறித்த புகைப்படங்கள்  எங்களைப் போன்ற மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாகவும் அடுத்த தலைமுறைக் கும் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இந்த கண்காட்சி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top