Close
மே 21, 2024 6:50 காலை

புதுக்கோட்டை நகராட்சி ரூ 9 கோடியில் புதிய பூங்கா அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் பூங்கா அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிர்புறம் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பூங்காவின் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மெர்சி ரம்யா இன்று (14.12.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: புதுக்கோட்டை நகராட்சியை எழில் சூழ்ந்த நகராட்சியை மாற்றும் வகையிலும், பொதுமக்களின் பொழுது போக்கிற்காகவும் புதுக்கோட்டை நகராட்சியால் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிர்புறம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை ரூ.9.25 கோடி மதிப்பீட்டில்  IUDM  திட்டத்தின் கீழ் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பூங்காவில் பொதுமக்கள் வருகை தருவதற்கான வழிகள், வாகன நிறுத்துமிடம், நிர்வாகக் கட்டிடம், பொதுமக்கள் கூடுமிடம், யோகா செய்வதற்கான அரங்கு, விலங்குகளின் உருக மாதிரிகள், சோலார் வைபை மரம், சறுக்கும் தளம், குழந்தைகள் விளையாட்டு தளம், கழிவறை வசதி, மூலிகை தோட்டம், லேசர் விளக்கு, நீர் வீழ்ச்சிகள்,

மூத்த குடிமக்க ளுக்கான வசதிகள், உடற்பயிற்சி கூடம், சறுக்கு வளையம், பலதரப்பட்ட விளையாட்டு கூடங்கள், சிற்றுண்டி கூடம், அறிவியல் அருங்காட்சியகம், மாய விளையாட்டு அரங்கம், உணர்வு பூங்கா, உருவத்துடன் கூடிய அமரும் இடம், நடைப்பயிற்சி வழித்தடம், பேனா உருவம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதுக்கோட்டை நகராட்சியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர்  எம்.லியாகத் அலி, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர்  ஷியாமளா, நகராட்சி பொறியாளர்  இப்ராஹிம், உதவிப் பொறியாளர்  கலியக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top