Close
ஏப்ரல் 28, 2024 10:32 காலை

குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை

பள்ளிக்குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி

குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடிய
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்(நவ.14) விழா புத்தகமில்லா தினமாக கொண்டா டப்பட்டது.

குழந்தைகளின் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டி ருக்கும்; பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம் மூர்த்தி தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள்வழங்கியும் வரவேற்றனர். குழந்தைகளைக் கொண்டாடு கின்ற இந்த நாளில் மாணவச் செல்வங்கள் வண்ண உடைய ணிந்து பள்ளி வளாகம் முழுவதும் மகிழ்ச்சியை விதைத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை
பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி

புத்தகமில்லா தினம் என்பதால் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், எதுவுமில்லாமல் கைகளை வீசியபடி பள்ளிக்கு வந்தனர். பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து பாடல், நாடகம், கண்ணைக் கவரும் வகையில் நடனம், நகைச்சுவை நிகழ்ச்சிகள்,கதைகள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டுகள் என ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் தினத்தை புத்தகமில்லா தினமாக கொண்டாடி தங்களை மகிழ்ச்சியாக, உற்சாகமாக வைத்துக் கொண்டதற்கு ஆசிரியர் களுக்கு மாணவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை
புத்தகமில்லா தினத்தை நடத்திய ஆசிரியர்கள்

இந்த நிகழ்வில் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப் பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி பிள்ளை மற்றும் உதயகுமார், காசாவயல்கண்ணன், கணியன் செல்வராஜ் மற்றும் ஏராளமான ஆசிரியப் பெருமக்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்வை ஆசிரியை சிவதர்சினி ஒருங்கிணைத்தார்.

1 Comment

  1. புதுக்கோட்டை மாவட்டத்தில் எவ்வளவோ பள்ளிகள் இருந்தாலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி எல்லா நிகழ்வுகளிலும் முன்னிலையில் உள்ளது. வாழ்த்துக்கள் அதன் தலைவர் திரு தங்கம் மூர்த்தி அவர்களுக்கு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 Comment
scroll to top