Close
நவம்பர் 22, 2024 10:27 மணி

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம்

அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கசிப்பட்டியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம்

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பட்டு வருகிறது.

இம்மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்பா.ஆனந்தராஜ் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்லாயிரக்கணக்கான கருவேல மரக்கன்றுகளை அகற்றியும், கருவேல மரத்தினால் இயற்கை வளங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்றும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும்,பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை தொடர்ந்து வளர்ந்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக அக்கச்சிப்பட்டி கிராமத்தில் உலக ஓசோன் தினத்தை நினைவு கூறும் வகையில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் ஓசோன் விழிப்புணர்வு பேரணியை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தொடங்கி வைத்தார் ‌.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தொடங்கி பொதுமக்களுக்கு ஓசோன் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியின் மூலம் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும்,காற்று மாசுபாட்டை குறைக்க அனைவரும் வீட்டில் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மாலை நிகழ்வாக மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குருவி கூடு நாடகத்தை மாணவிகள் கல்பனா, ஆஷிகா, விமலா, தேவி, சுருதி கலை, வீரலட்சுமி, தீபிகா, ஹன்சிகா, ஆகியோர் நடித்து காட்டினார்கள்.
சுஷ்மிதா, தீப்தா, தையல் நாயகி, சுப்ரியா,நீமா ஆகியோர் நடனம்  ஆடினார்கள், காகிதத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்ற நாடகத்தை தீபக் குமார், வசிகரன், காளிதாசன், ஆகாஷ்,தீபக் தமிழரசன் முனிராஜ், செல்வமணி, விஷ்ணு ஆகியோர் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

சுற்றுச்சூழல் பாடல்களை கல்பனா,விமலா தேவி, வீரலட்சுமி, தீபிகா,ஆசிகா, சுருதி கலை ஆகியோர் பாடினார்கள். முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அ.ரகமதுல்லா பூமி பாதுகாப்பு என்ற தலைப்பில் பேசினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நிவீன்,செல்விஜாய் ஆகியோர்  செய்தனர்.நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top