Close
நவம்பர் 22, 2024 7:50 மணி

சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கூடட் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சென்னை தலைமை அலுவலக செயல் இயக்குநர் முனைவர். ஜி. என். ஹரிகரன்

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய பங்காளர்கள் கூட்டம் புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சென்னை தலைமை அலுவலக செயல் இயக்குநர் முனைவர். ஜி. என். ஹரிகரன் தலைமை வகித்து பேசியதாவது: எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

விவசாயத்தில் பல்வேறு புதிய மாறுதல்கள் வந்துள்ளது. அதே போல் புதுப்புது சவால்களும் வந்துள்ளது.வறுமையை ஒழிப்பது, பசியே இல்லாத நிலைமை ஏற்படுத்துவது ஆகியவை ஐக்கிய நாடுகளின் சபையின் நீடித்த வளர்ச்சிக்கான குறிக்கோள்களில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.

இதற்கெல்லாம் தீரவு விவசாயத்திலிருந்து தான் வந்தாக வேண்டும். காலநிலை மாற்றம் விவசாயத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த சவால்களை சமாளிக்க விவசாயகளின் திறனை மேம்படுத்த வேண்டும். இங்கு விவசாயத்தில் தீவிரமாக ஈடுபடும் பெண் விவசாயிகளை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

பெண்கள் விவசாயத்தில் பெரும்பாங்காற்றுகின்றனர். ஆனால், அவர்களின் உழைப்பு அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நல்ல விலைக்கு சந்தைப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது.

தண்ணீர், மண் மற்றும் பல் துளிகள் பெருக்கம் ஆகிய இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் தான் இதற்கெல்லாம் தீர்வு காண முடியும். எனவே, இளைய சமுதாயம் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட முன்வர வேண்டும்.

இன்றைக்கு விவசாயத்தில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண அனைத்து பங்காளர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். எனவே, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன சூழலியல் துறை இயக்குநர் முனைவர். ஆர்.ரெங்கலெட்சுமி பேசும் போது, விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை மேம்படுத்துவது, தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்குவது மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் ஆகியவைகளில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வருகின்ற நாட்களில் போதிய கவனம் செலுத்தும் என்றார்.

புதுக்கோட்டை

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குநர் பங்கேற்ற பங்காளர்கள் கலந்துரையாடல் கூட்டம்.

வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப் பாளர்கள் முனைவர். வி .எம். இந்துமதி முன்னிலை உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி முனைவர். ஆர்.ரமேஷ், வேளாண்மை அலுவலர் முகமது ரபி, புஸ்கரம் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர். வி. செல்லமுத்து.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் எம்.வீரமுத்து, மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கே.சதாசிவம் முன்னோடி விவசாயி ச.வே.காமராசு, ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கரு முருகேசன் புள்ளான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சி .கே பன்னீர் செல்வம், மேலப்பட்டி கிராம அறிவு மைய மேலாண்மைக் குழு தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

புதுக்கோட்டை

நிகழ்வில் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள உள்ளிட்ட 50 பேர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கே.சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். களஒருங்கிணைப்பாளர் டி. விமலா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top