புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில், இளையோர் கலை விழா ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் இளையோருக்கான ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, மொபைல் போட்டோகிராபி, பேச்சுப்போட்டி, குழு நடனம் ஆகிய போட்டிகள் மற்றும் இளையோர் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன.
இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் இளைஞர் மகளிர் மன்ற உறுப்பினர்கள் என 350 -க்கும் மேற்பட்ட இளையோர் பங்கேற்றனர். சிறப்பித்தனர்.
கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் பீர் முகமது, ஓவியர்கள் ரவி, வெங்கடேசன் புகைப்படக் கலைஞர்கள் ஞானசேகரன், ராஜா, பேராசிரியர்கள் சித்ரா, ரெங்கசாமி, சேது கார்த்திகேயன், கலைமாமணி சத்தியபாலன், புகழேந்தன், பிரபு, பேராசிரியர்கள் தயாநிதி, கோவிந்தன்.சதாசிவம் மற்றும் வீரமுத்து ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தி பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தனர்.
பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர், மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற இளையோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் நேரு யுவ கேந்திரா மூலமாக பல்வேறு வகைகளில் சிறந்த செயல்பாட்டாளர்களாக விளங்கும் இளையோர் நிலாபாரதி, கடலரசி, ஜனார்த்தனன் மணிகண்டன் ஆகியோரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி கௌரவித்தார்.
கவிஞர்தங்கம் மூர்த்தி மற்றும் ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பரசுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிமாறன், நேரு யுவ கேந்திரா தேர்வுக் குழு உறுப்பினர் திருமயம் சரவணன், மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் வீரமுத்து, புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிறுவனர் சேது கார்த்திகேயன் ஆகியோர் இளையோரை வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக நேரு யுவ கேந்திராவின் திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் வரவேற்றார். ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் பேரா.தயாநிதி நன்றி கூறினார்.