Close
மே 20, 2024 7:07 மணி

காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற காந்தியதிருவிழாவில் பேசுகிறார், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

புதுக்கோட்டையில் அகில இந்தியா மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சார்பில் அதன் நிறுவனத்தலைவர் வைர.ந.தினகரன் தலைமையில் நடைபெற்ற காந்தியத்திருவிழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்று  விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், கடந்த 19 ஆண்டுகளாக நடத்தப்படும் புதுக்கோட்டை காந்திய திருவிழாவில் இங்கே இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொடர்ந்து நடத்தி வருகின்ற  தினகரனை  எப்படி பாராட்டினாலும் தகும்.  தமிழகம் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில்  விருது  பெருகின்ற தமிழகத்திற்கு தமிழகத்தின் கிராமங்களுக்கு காந்திய தத்துவத்தின் அடிப்படையை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்ற பேராசிரியர் முனைவர் பழனி துரை, மேனாள் துணை வேந்தர் சொ.சுப்பையா, இங்கே மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற சிறுவயல் பழ. கருப்பையா,  சென்னையிலிருந்து மதுவுக்கு எதிராக மகளிர் சார்பில் நடத்துகின்ற விழிப்புணர்வு இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்ற ஆனந்தி அம்மாள், நல்லாசிரியர் விருது பெற்றிருக்கின்ற குருதிக்கொடை முத்துராமலிங்கம் மற்றும் அனைவருக்கும்  வாழ்த்துகள்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை காந்திய திருவிழாவில் பங்கேற்றோர்

நாம்  பெருமைப்பட வேண்டிய ஒன்று என்ன என்று சொன்னால் காந்தி  வாழ்ந்க பூமிகள்  நாள்கள் வாழ்ந்தோம் காந்தி நடந்த மண்ணிலே நாங்கள் நடந்தோம் காந்தியின் சுவாசக் காற்று உலவிய காற்றை நாங்கள் சுவாசித்தோம் என்பதே பெருமைக்குரிய விஷயம்.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் உடன் காமன்வெல்த் மாநாட்டிற்காக உகண்டா என்கின்ற நாட்டிற்கு பத்திரிக்கை யாளர்களின் ஒருவனாக நான் சென்றிருந்தேன். அப்போது அந்த உகண்டா நாட்டிலே நைல் நதி தோன்றுகின்ற சோர்ஸ் ஆப் நைல் நதி உற்பத்தி ஆகின்ற விக்டோரியா அருவியை பார்ப்பதற்காக நாங்கள் செல்ல இருந்தோம். மூன்று நாடுகளை இணைக்கின்ற இடம் அது.

அதற்கு போவதற்கு ஒரு படகில் தான் போக வேண்டும். படகுத்துறைக்கு சென்றபோது அங்கே அண்ணல் காந்தியுடைய சிலை  இருந்து. நானும் மாத்ரூபூமி ஆசிரியரும் அந்தச் சிலை அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.  முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால்  திறந்து வைத்த சிலை அது.  அருகே நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சில ஆப்பிரிக்கர்கள் வந்தார்கள், அந்த சிலையை அருகில் வந்த போது தங்கள் தொப்பியை எடுத்து காந்தியடிகளுக்கு வணக்கம் செலுத்தி விட்டு சென்றார்கள்.

இவர்கள் ஏதோ வணக்கம் செலுத்தி விட்டு செல்கிறார்களே .இவர்கள் என்ன  காந்தியை தெரிந்துதான்  வணக்கம் செலுத்துகிறார்களா   அல்லது இவர்களது சிறு தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்துவது போல  வணக்கம் செலுத்துகிறார்களா என்ற ஐயத்துடன் அவர்களிடம் சென்று  காரணம்  என்ன என்று கேட்டேன்.

அப்போது அவர்களில் ஒருவர் சொன்னார்  எங்கள் ஆப்பிரிக்கர்களுக்கு தன்மான உணர்வை தந்த மனிதன் உங்கள் இந்தியாவில் இருந்து வந்த இந்த மகாத்மாதான்.  சுயமரியாதை என்றால் என்ன என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்த மனிதன் இந்த மகாத்மா காந்தி. அதனால்தான் தலை வணங்குகிறேன் என்றார்.

 தேவ தூதனாக அவதரிக்க வில்லையே தவிர மனித இனத்தை மீட்க வந்த தூதனாக அவதரித்தவர் மகாத்மா காந்தி என்பது தான் அவர்கள் அனைவரின் கருத்து. இந்தியாவில் நான் ரூபாய் நோட்டுடன் நிறுத்திக் கொண்டு விட்டோம் காந்தியை. அவர்கள் தங்கள் மனதில் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றை உலகின் அத்தனை பிரச்னைக்களுக்கும் தீர்வு காண வேண்டுமானால் அந்தத்தீர்வு எங்கேயிருக்கிறது என்று கேட்டபோது,  பேசினார் ஐக்கிய நாடுகள் சபையில்  ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அவர்களது பிரதிநிதி கென்யா நாட்டின் பிரதிநிதி,   இதற்கான தீர்வு ஒன்றே ஒன்றில்தான் இருக்கிறது. அது காந்தியில் இருக்கிறது.

அண்ணல் காந்தியடிகள் கனவு கண்ட ஜனநாயகம் அல்ல, இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணல் காந்தியடிகள் சொன்ன கோட்பாடுகளிடம் படி நடக்கும்  ஆட்சி அல்ல இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி. அண்ணல் காந்தியடிகள் என்ன சொன்னார் என்றால் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு  பெற்ற கிராமங்களாக மாறி  ஒன்றிணையும் போது தன்னிறைவு பெற்ற மாவட்டங்கள் அமையும்,  தன்னிறைவு  பெற்ற மாவட்டங்கள் அமையும் போது தன்னிறைவு  பெற்ற மாநிலங்கள் அமையும் தன்னிறைவு பெற்ற மாநிலங்கள் அமையும் போது தன்னிறைவு பெற்ற நாடு அமையும். அதுபோல எல்லா நாடுகளும் அமைந்துவிட்டால் தன்னிறைவுபெற்ற உலகம் அமையும்.

அந்தந்த கிராமங்கள் அவரவருடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ளுகின்ற கிராமங்களாக மட்டும் இருந்து விட்டால் இன்றைய சந்தை பொருளாதாரத்திற்கான இடமே இல்லை.  அப்படி ஒரு நிலைமை வந்துவிட்டால் இதோ இந்த ஆப்பிரிக்காவில் நமக்கெல்லாம் தெரியவில்லை . இந்தியாவில் இருக்கிறோம் சந்தோஷமாக இருக்கிறோம் நினைவில் கொள்ளுங்கள்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை காந்திய திருவிழாவில் பங்கேற்ற ஆர்வலர்கள்

ஆப்பிரிகா நாடுகள் முதல் அமெரிக்கா வரை இப்போது டீசல் இல்லாமல் பல பெட்ரோல் பங்குகளில் கலவரங்கள் ஆங்காங்கே  நடந்து கொண்டிருக்கின்றது .ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் காந்தியடிகள் சொன்னார் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக இருந்து விட்டால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் பொருளாதார இடர் வந்தாலும் அங்கே பட்டினி இருக்காது அங்கே அவதி இருக்காது தன்னிறைவு பெற்ற மனிதர்களாக தன்னிறைவு பெற்ற கிராமங்களாகத் திகழும்.

 இப்படிப்பட்ட அவருடைய தத்துவத்தை நம்மை நாமே எப்படி செம்மையாக ஆட்சி செய்து கொள்ள முடியும் என்கின்ற உள்ளாட்சி தத்துவத்தை என்கின்ற கிராம சுயராஜ்யம் உள்ளாட்சி தத்துவத்தை இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் முறையாக செய்கிறார்களோ இல்லையோ அதற்கு ஆள் இருக்கிறார்களோ  இல்லையோ  தமிழகத்தில் ஒரு தனிமனித இயக்கமாக நடத்திக் கொண்டிருப்பவர் முனைவர் பழனிதுரை. எனக்கு  இது தனி நபர் முனைப்பாகத்தான் தெரிகிறது.

 இன்று வரை காந்தியடிகள் அடிக்கடி சொல்வார்  இருக்கின்ற வலிமை குறைந்து மெலிந்து போய் இருக்கிற யாராக இருந்தாலும் அவர்களுக்கு அருகில் நான் நிற்பேன் என்று  காந்தி கூறினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அண்ணல் காந்தியடி களிடம் போய் கேட்டார்கள். சுதந்திர இந்தியா நேரு தலைமையில் ஆட்சி அமைகிறது, பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைகிறது. சுதந்திர இந்தியாவுக்கு நீங்கள் சொல்லும் சேதி என்ன.

சுதந்திர இந்தியாவுக்கு  எப்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்பதற்கான உங்களது அறிவுரை என்ன கேட்டபோது காந்தியடிகள் சிரித்துக் கொண்டே சொன்னார்.  நான் அவர்களுக்கு ஒரு தாயத்தை தருகிறேன் அந்தத் தாயத்தை கையில் வைத்துக் கொள்ள சொல்லுங்கள்.

 இதை அண்ணல் காந்தியின் மகாத்மா காந்தியின் தாயத்து என்று கருதி  இந்த தாயத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.  யார் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறீர்களோ  யாரெல்லாம் உயர் அதிகாரிகளாக இருக்கிறீர்களோ யாரெல்லாம்  உயர் பதவிகளில் இருக்கிறீர்களோ, நீதிபதிகளாக காவல்துறை, மாவட்ட ஆட்சியர்களாக இருப்பவர்கள் எல்லாம் அதை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏதாவது ஒரு பிரச்னையில் முடிவெடுப்பதற்கு ஐயப்பாடு வந்தால் இதில் நான் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிப்பதாக இருந்தால். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்கின்ற சந்தேகம்  எழுந்தால் இந்த தாயத்தை எடுத்துப் பார்த்துக் கொள்ளட்டும் அவர்களுக்கு விடை கிடைக்கும்.

 அந்த தாயத்து என்னவெனில், இந்தியாவின் மிக பிற்பட்ட  ஒரு பகுதியில் இருக்கின்ற ஒரு முதிய வயதான ஏழை விவசாயி முகம் தான் அந்த தாயத்து.  ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கின்ற அவன் அரைகுறை ஆடையுடன் மூன்று நாள் நான்கு நாள் குளிக்காமல் பட்டினி கிடந்து, கன்னம் உலர்ந்து போய் பசியால் வாடி அப்படி இருக்கின்ற அந்த விவசாயி உடைய முகம் தான் அந்த தாயத்து. அந்த தாயத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்.

நான் எடுக்கின்ற இந்த முடிவு இவனுக்கு சாதகமாக இருக்குமா இவனுக்கு நன்மை பயக்குமா இது நாள் இவன் மேம்படுவானா அந்த முடிவை எடுங்கள்.  அவனுக்கு பாதகமாக இருக்கும் என்று சொன்னால் அந்த முடிவை  எடுக்காதீர்கள் இதுதான் மகாத்மா காந்தி இந்தியாவிற்கு இந்திய ஆட்சியாளருக்கு கொடுத்த தாயத்து.

அவருடைய கோட்பாடுகளை அவருடைய கிராம சுயராஜ்யம் என்று சொல்லுகின்ற தன்னாட்சி தத்துவத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லுகின்ற ஒரு தனி நபர் இயக்கத்திற்கு பொறுப்பாளரான முனைவர் பழனிதுரைக்கு பொருத்தமான இந்த விருதை வழங்கி இருப்பதற்கு முதலில் தினகரனுக்கும்,  தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பங்களித்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் இந்த மாமன்றத்துக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

 இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நான் கிளம்பும்போது ஒருவர் கேட்டார் நீங்கள் இதற்கு போகத்தான் வேண்டுமா என்று,  அப்போது நான் சொன்னேன், இதற்கு போகாமல் இருந்தால் இந்த தாய் மண்ணுக்கு நான் செய்கின்ற துரோகம். ஏனென்றால் காந்தியை பற்றி அண்ணலை பற்றி பேசுகின்ற  கூட்டம் அரிதாகிக் கொண்டிருக்கிற வேளையில்  தினமணி ஆசிரியர் என்ற  ஒரு பொறுப்பை எனக்கு இறைப்பெரும்பொருள் தந்திருக்கும் போது அதை காந்தியத்துக்காக என்னுடைய சிரமம் பாராமல் நான் போய் சேர வேண்டிய  கட்டாயம் எனக்கு இருக்கிறது. அது எனது கடமை.

இன்று காந்தியம் என்றால் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்கு புரியும் விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு காந்தியைப் பற்றி கவலை இல்லை . அவர்கள் கட்சிபேதம் இல்லாமல்  எந்தக் கட்சியாக  இருந்தாலும் சரி. காந்தி மீதும் காந்தியத்தியத்தின் மீது எந்த விதமான பற்றும் இருப்பதற்கு  வாய்ப்பில்லை.  ஏனென்றால் காந்தி நேர்மை பற்றி கூறினார். காந்தி ஒழுக்கமாக  இருக்க வேண்டும் என்று கூறினார், காந்தி ஆடம்பரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இவை  எதுவுமே இல்லாமலிருக்கின்றவர்கள் இன்றைய அரசியலுக்கே தகுதியில்லாதவர்கள் என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில், காந்தியைப் பற்றி  எதுவுமே பேசமாட்டார்கள். பல அடிப்படைக் காரணங்களால் அதிகாரிகள் பேச மாட்டார் . படித்த பேராசிரியர்கள் பேசமாட்டார்கள்.

ஆனால் அதையும் மீறி காந்தியத்தை நாம்  கொண்டு சேர்த்தாக வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த கடமையை தனிமனித இயக்கமாக நடத்தி வருகின்ற முனைவர் பழனிதுரை  பின்னால் நாம் நடந்தால் போதும் ,வழிகாட்ட அவர் இருக்கிறார். இந்த செய்தியை தமிழகத் திற்கு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான்  இந்த மேடைக்கு வந்தேன் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

இதில் கவிஞர் தங்கம்மூர்த்தி, சத்யராம் ராமுக்கண்ணு, வழக்கறிஞர் கை. பாலசுந்தரம், பேராசிரியர் சா. விஸ்வநாதன், பேராசிரியர் கருப்பையா, அய்யாவு, ஜி.எஸ். தனபதி, நிலவைபழனியப்பன், பீர்முகமது, அறிவியல் இயக்க நிர்வாகிகள் வீரமுத்து, எஸ்டி. பாலகிருஷ்ணன், சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top