புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஆயுதபூஜை விழா விமரிசையாகக்கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பூஜையாக வழிபடப்படும் ஆயுத பூஜை ஆகும்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்துக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாள்கள் துர்கா தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு நவராத்திரி விழா வடநாட்டில் கொண்டாடுகின்றனர். அதேபோல தமிழ்நாட்டில் வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டும், நவராத்திரியின் 9 -ஆம் நாளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, அதற்கடுத்த நாளான விஜயதசமி விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது..
பொதுவாக ஆயுத பூஜை நாள்களில் தொழிலுக்கு பயன்படுத் தும் பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களையும் வைத்து மக்கள் வணங்குவதே ஆயுத பூஜை என்று அழைக்கப் படுகிறது. இந்த நாள்களில் மக்கள் தங்கள் வீடுகள் தொடங்கி வாகனங்கள் வரை முழுமையாக தூய்மை செய்து பூஜை செய்து கொண்டாடுகின்றனர். தங்கள் தொழில் சார்ந்த கருவிகள் தொடங்கி சமையலறை சாதனங்கள் வரை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
அதன்படி, புதுக்கோட்டையில் புகழ் பெற்ற எஸ்விஎஸ் குழுமத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் அங்குள்ள விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தினர்.
நிகழ்வில், நிர்வாக இயக்குநர் எஸ்விஎஸ். ஜெயகுமார், நிர்வாகி கார்த்திகாஜெயகுமார் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதையொட்டி அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.