மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் ,கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரல், அன்பு பிசியோதெரபி சிகிச்சை மையம், ஒமேகா ரீஹாப் சென்டர் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி ஹாலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் செயற்கை கை கால் உபகரணங்கள் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க நிறுவனத் தலைவர் கண.மோகன்ராஜா, புதுக்கோட்டை சென்ட்ரல் தலைவர் டாக்டர் அன்பு தனபாலன், டாக்டர் தினேஷ் குமார் ,டாக்டர் செந்தில், மண்டல தலைவர் ராஜலிங்கம் மண்டல செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தேசிய முன்னாள் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
இதுவரை இந்த அமைப்பு 103 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை கால் வழங்க திட்டமிட்டுள்ளதாக புதுக்கோட்டை சென்ட்ரல் தலைவர் டாக்டர் அன்பு தனபால் தெரிவித்தார்.நிறைவில் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.