புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவில் நவராத்திரி விழாவில் 10-ம் நாளான விஜயதசமி பண்டிகையில் மகிஷாசுரன் எனும் அரக்கனை அம்மன் அழிக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவில் முன்பு நடைபெற்ற நிகழ்வில் லட்சுமி, சரஸ்வதி, துர்கா ஆகிய அம்மன்கள் ஒன்றாக உருவமெடுத்த அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதில் அரக்கனை வாழை மரம் போல சித்தரித்து, அதில் அம்பு எய்து, அரக்கனை அழிக்கும் போன்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை நகரத்தார் செய்திருந்தனர் இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.