Close
நவம்பர் 22, 2024 3:47 காலை

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

சென்னை

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் 11.10.2022 அன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் இம்மனிதச் சங்கிலிப் போராட்டம் புதிய வரலாறு படைக்க உள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள தகவல்படி பல லட்சம் பேர் மனிதச் சங்கிலியில் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து கூட்டாகக் கலந்து பேசி முடிவெடுக்கப் பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடங்கி இன்னொரு குறிப்பிட்ட இடம் வரையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் கைகளைக் கோர்த்து நிற்க வேண்டுகிறோம்.

சென்னையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சார்ந்த அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் யாவரும் மனிதச் சங்கிலியில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் கரம் கோர்த்து நிற்பார்கள். இதனைத் தொடர்ந்து சாந்தி தியேட்டர் வரை வடசென்னை மாவட்டத்திற்கு உள்ளிட்ட தோழர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும்.

சாந்தி தியேட்டர் முதல் எல்ஐசி வரை மத்திய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும்.எல்ஐசி முதல் ஆயிரம் விளக்கு மசூதி வரை தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும்.

தோழர்கள் ஒரே இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் மனித சங்கிலி இயக்கம் சிறப்புடன் நடைபெற்றிட மேற்கண் டவாறு குறிப்பிட்டுள்ள இடங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங் களைச் சேர்ந்தவர்களை அணிதிரட்டி இந்த மாபெரும் இயக்கத்தில் பங்கேற்கச் செய்திட சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

எந்தச் சூழ்நிலையிலும் போக்குவரத்திற்கு இடையூறாக மனிதச் சங்கிலி அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்பதை கவனப்படுத்து கிறோம்.

மாலை 4.00 மணிக்கு மனிதச் சங்கிலி துவங்கி சரியாக 5.00 மணிக்கு முடித்திட வேண்டும். மனித சங்கிலி முடிந்தவுடன் அமைதியான முறையில் அனைவரும் கலைந்து செல்ல வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு தெரிவித்துள்ள அரசியல் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் விவரம்:

ஆசிரியர் கி. வீரமணி(தலைவர், திராவிடர் கழகம்).கே.எஸ். அழகிரி(தலைவர், தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி),  வைகோ (பொதுச் செயலாளர், மதிமுக).கே. பாலகிருஷ்ணன்(மாநில செயலாளர்,சிபிஐ(எம்)). இரா. முத்தரசன்(மாநில செயலாளர், சிபிஐ) தொல் திருமாவளவன்(தலைவர், விடுதலைச்சிறுத்தை கள் கட்சி). கே.எம்.காதர்மொய்தீன்(தேசியத் தலைவர், இ.யூ.மு.லீக்). எம்.எச். ஜவாஹிருல்லா(தலைவர், ம.ம.க).  தி. வேல்முருகன்(தலைவர், தமிழக வாழ்வுரிமைக்கட்சி).

ஆதரவாக களம் காணும் கட்சிகள்:  மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ,  நாம் தமிழர் கட்சி,
சிபிஐ (எம்.எல்- விடுதலை), தமிழ்ப் புலிகள் கட்சி,அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய திரிணா மூல் காங்கிரஸ், தமிழக விடியல் கட்சி, பீமாராவ் குடியரசு கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, அறநெறி மக்கள் கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி, மக்கள் முன்னேற்றக் கட்சி,  பச்சைத் தமிழகம் கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள், அருந்ததி கட்சி.

ஆதரிக்கும் ஜனநாயக இயக்கங்கள்:
திராவிடர் விடுதலைக் கழகம், த.பெ.தி.க, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, மே17 இயக்கம், சிஐடியு, ஏஐடியுசி, எல்.எல்.எஃப்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், காஞ்சி மக்கள் மன்றம், முக்குலத்தோர் புலிப்படை ( கருணாஸ்).

தமிழ்நாடு இளைஞர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மக்கள் அதிகாரம், டிசம்பர் 3 இயக்கம், இந்திய மாணவர் சங்கம்,  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு மாணவர்கள் இளையோர் கூட்டமைப்பு,  தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச் சங்கம்.

தமிழ்நாடு படைப்பாளிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்,
இந்திய தவ்ஹித் ஜமாத், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
தேசிய முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் நீதிக்கழகம்,
சமூகநீதிப் பேரவை, மூவேந்தர் புலிப்படை.

 ஜெய்பீம் இளைஞர் பேரவை, தலித் விடுதலை இயக்கம், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், பே பேக் டு த சொசைட்டி, தமிழீழ விடுதலைக்கான இளைஞர்கள் அமைப்பு, மாணவத் தலைமுறை இயக்கம்,37. இளைய தலைமுறை அமைப்பு,
ஏ ஐ எம் ஐ எம், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கம்,
பெரம்பலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத்,  ஏகத்துவ முஸ்லீம் லீக்,
அருந்ததி கட்சி, அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top