Close
மே 20, 2024 5:13 மணி

திருவண்ணாமலையில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கூல் சுரேஷ்

காய்கறி கடையில் அமர்ந்து காய்கறிகளை வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த கூல் சுரேஷ்

திருவண்ணாமலையில் பாஜகவிற்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், சிரிப்பு நடிகருமான கூல் சுரேஷ் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் காய்கறிகளை வியாபாரம் செய்து திருவண்ணாமலை நாடாளுமன்றத்தில் பாஜகவில் போட்டியிடும் அஸ்வத்தாமனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திருவண்ணாமலை நகரப் பகுதியில் தேரடி வீதி, திருவூடல் தெரு, காமராஜர் சிலை, தாமரை நகர், உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து தேனிமலை பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் திறந்த வெளி ஜீப்பில் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு டீக்கடை அக்கா ஒருவர் டீ கொண்டு வந்து கொடுத்து எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என கூல் சுரேஷிடம் கூறினார்.

அப்போது டீயை வாங்கி பருகுவதற்கு முன்பாக கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீயை போடு என்று அக்காவின் பாசமான சூடான டீயை ரைமிங் பாடி கூல் சுரேஷ் டீயை குடித்தார்.

வரும் காலத்தில் மலரும் தாமரையால் இனி திருவண்ணாமலை பகுதியில் ஏசி பேருந்துதான் ஓடும் எனக் கூறி வாக்குகளை சேகரித்தார் கூல் சுரேஷ். மேலும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்ற கல்லூரி மாணவர்களிடம் அடே பேருந்தில் தொங்காதீங்கடா!  உங்களுக்காக வீட்டில் உங்கள் குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்கள் இடத்திலும் இளம் தலைமுறை வாக்காளர்கள் இடத்திலும் கூல் சுரேஷ் வாக்குகளை சேகரித்தார்.
பின்னர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடையில் கூல் சுரேஷ் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் காய்கறிகளை வியாபாரம் செய்து திருவண்ணாமலை நாடாளுமன்றத்தில் பாஜகவில் போட்டியிடும் அஸ்வத்தாமனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top