Close
நவம்பர் 21, 2024 6:36 மணி

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கை: ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கம் கண்டனம்

புதுக்கோட்டை

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கம் தீர்மானம்.

ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தியை பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்கும் நடவடிக்கையைக் கண்டித்து தமிழ்நாடு ஒய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் ஜி.சரஸ்வதி தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செயபாலன், பொருளாளர் கிருஷ்ணன், இணைச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பேசினர்.

ஒன்றிய அரசு  உயர் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தியை பாட மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஆக்குவதை கண்டிப்பதோடு, அரசியல் அமைப்பு சட்டப்படி அட்டவணை 8 ல் உள்ள 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும். தாய்மொழுயை ஆட்சி மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் அறிவிக்கவேண்டும். ஓய்வூதியர்க ளுக்கு நிலுவையின்றி அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

ஒருமாத ஓய்வூதியத்தை தீபாவளிப் போனசாக வழங்க வைண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 10 விழுக்காடு கூடுதல் ஒய்வூதியம் வழஙகவேண்டும். காப்பீட்டுத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களையவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Attachments area

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top