Close
செப்டம்பர் 20, 2024 8:33 காலை

புதுக்கோட்டை – கந்தர்வக்கோட்டை தொகுதிகளின் தேவைகள்: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை, கந்தர்கோட்டை தொகுதிகளின்தேவைகள் தொடர்பாக ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை தொகுதிகளின் தேவைகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய மனுக்கள் மீது மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் அவசியத் தேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்;கை மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியத்தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .எம்.சின்னத்துரை  ஆகியோர் முன்னிலையில் இன்று (20.10.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: பொது மக்களின் கோரிக்கைகளை விரைந்து தீர்க்கும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித் துறையை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். அதில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பரிந்துரைகளை வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் வழங்கியுள்ள 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை விரைந்து நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினர்கள், திட்ட இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், இணை இயக்குநர்கள் வேளாண்துறை, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் தற்போது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை ஆகியோர்கள் தங்களது சட்டமன்ற தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்களை விரைந்து நிறைவேற்றிடும் வகையில் தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடைமுறையின்படி, விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top