Close
மே 20, 2024 9:08 மணி

ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் பண்டிதர்கள் பங்கேற்கச்செய்ய வேண்டுமென மதிமுக கோரிக்கை

தமிழ்நாடு

தஞ்சை மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன்

ஆசிரியர்களுக்கான தகுதி காண் தேர்வில் தேர்வு எழுத தமிழ் பண்டிதர்கள் புறக்கணிக்கப்பட்டதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக அவர்கள் தேர்வு எழுத ஆணை பிறப்பிக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்ட அறிக்கை:பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த தமிழ் ப்பண்டிதர், தமிழ்ப் புலவர் இணையானதுமான கல்வியல் கல்வி B.ED .என்ற நடைமுறை தமிழ்நாட்டில் கடந்த 2017 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பளிக்கப்பட்டு டெட் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2019 முதல் தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பாக வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதி காண் தேர்வில் தமிழ் பண்டிதர் T.P.T.(TAMIL PANDI TRAINING) தேர்வு எழுத பட்டியலில் விடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., தமிழ்ப்புலவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். பி.லிட் பட்டம் முடித்து, அதன் தொடர்ச்சியாக ஆறு மாதம் தமிழ் பண்டிதர் பயிற்சியும் முடித்தவர்களுக்கு அரசு வேலை வழங்க முனைவர்கள் விருத்தாசலம், பச்சையப்பன் கோரிக்கையை அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏற்றதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் பண்டிதர்கள், புலவர்கள் அரசு பள்ளிகளில் வேலையில் சேர்ந்தனர்.

அதற்கு பிறகு மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி ஆசிரியர்களுக்காண தகுதி காண் தேர்வு நடத்தப்பட வேண்டும், மொழி ஆசிரியர் குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முடிவின் படி தமிழ் புலமை படிப்புகளில் தகுதி பெற்றவர்கள் கடந்த 2017 வரையில் தேர்வு எழுதி உள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை 70 ல் ஆசிரியர் தகுதிக்காண தேர்வு 2017 ல் தமிழ் பண்டிதர்கள் தேர்வு எழுத தகுதி பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால் 40,000 ம் தமிழ் பண்டிதர்கள் தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஆசிரியர் தகுதிக்கான தேர்வு (டெட்)தமிழ்நாட்டில் மீண்டும் பழைய நடைமுறையின் படி TN.TRB.,40,000 தமிழ்ப் புலவர்கள்,தமிழ்ப் பண்டிதர்கள் ஆசிரியர் தகுதிக்கான தேர்வு எழுதும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர்  கனிவு கூர்ந்து உடனடியாக அரசாணை பிறப்பித்து அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்ப் பண்டிதர், தமிழ்ப் புலவர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும் , தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. சார்பாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம் என முனைவர் வி.தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top