Close
செப்டம்பர் 20, 2024 7:04 காலை

போனஸ் வழங்காததைக் கண்டித்து ஏஐடியுசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

போனஸ் வழங்காததைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள்

நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கப்படாததைக்  கண்டிக்கு தஞ்சையில் ஏஐடியூசி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் மற்றும் சுமை பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படாததை கண்டித்து கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு நிலையங்கள் முன்பு கொள்முதல் பாதிக்காத வகையில் இன்று 22~10~2022 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இது குறித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடிய சி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் கூறியதாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கும், கொள்முதல் நிலைய,சேமிப்பு நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்குவதில் மிகுந்த காலதாமதப்படுத்தப் படுகிறது.

பல ஆண்டுகள் தீபாவளிக்கு பிறகு தான் போனஸ் வழங்கப்பட்டது. காலத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பே நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் ஏஐடியூசி சங்கத்தின் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது கடந்த 18 .10 .2022 அன்று தலைமை அலுவகத்திலிருந்து உரிய ஆணை மண்டலங்களுக்கு அனுப்பியும், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் முழுமையாக போனஸ் வழங்கப்படவில்லை.

பெரும்பாலான சுமைதூக்கம் தொழிலாளர்களுக்கு கொள்முதல் தொடங்கியதிலிருந்து இதுவரை கூலி வழங்கப்படவில்லை. இனி வங்கி விடுமுறை நாட்கள் என்பதால் தீபாவளிக்குப் பிறகுதான் போனஸ் கிடைக்கும் என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் காலந்தாழ்த்தி வங்கிக்கு அனுப்பியதால் பெரும்பாலான சுமைதூக்கும் தொழிலாளர்கள் போனஸ் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சாதாரண ஏழை எளிய தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழங்கப்படும். போனஸ் நோக்கம் சிதைக்கப்படுகிறது.தொழிலாளர்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர். நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இந்த போனஸ் கிடைக்காத நிலை தொடர்வது கவலைக்குரியது. கண்டனத்திற்குறியது.

இனி வரும் காலங்களில் இது போன்ற நிலைமைகள் போக்கப்பட வேண்டும் போனஸ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்று ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top