Close
செப்டம்பர் 20, 2024 7:00 காலை

தமிழகத்தில் ஆன்மீகத்தையும் தமிழையும் தனியாக பிரிக்க முடியாது:  பேராசிரியர் தி. ராஜகோபாலன் பேச்சு

சென்னை

திருவொற்றியூரில் பாரதி பாசறை விழாவில் சார்பில் நடைபெற்ற திருப்புகழ் பத்தாவது ஆண்டு நிகழ்ச்சியில் பேராசிரியர் தி. ராஜகோபாலன் அவர்களுக்கு வழங்கப்பட்ட' சைவ தமிழ் விருது' வழங்கிய பாரதி பாசறை நிர்வாகிகள் முனைவர் மா.கி. ரமணன், ஜி வரதராஜன்,என் துரைராஜ் நீலகண்டன், கந்தன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்.

தமிழகத்தில் ஆன்மீகத்தையும் தமிழையும் தனித்தனியாக பிரிக்க முடியாது என என பேராசிரியர் டி ராஜகோபாலன் தெரிவித்தார
திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் பத்தாவது திருப்புகழ் உரை மற்றும் முப்பெரும் விழா நிகழ்ச்சி திருவொற்றியூரில்  நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் ஜி. வரதராஜன் தலைமை வைத்தார். அப்போது முனைவர் மா.கி. ரமணன் எழுதிய’ நலம் தரும் சிவம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் பேராசிரியர் கி.ராஜகோபாலன் கலந்து கொண்டார். அவருக்கு பாசறை சார்பில் ‘சைவத்தமிழ்செல்வர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
அப்போது ராஜகோபாலன் பேசியதாவது: தமிழ் இலக்கிய மேடைகளில் என்பது நகைச்சுவை கலந்து இருக்க வேண்டுமே நகைச்சுவைக்காக தமிழை பலிகடாவாக்கிவிடக்கூடாது.  தமிழ் இலக்கிய மேடைகளில் நகைச்சுவைக்காக மட்டுமே சிலர் தமிழை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது.
தமிழ் என்பது சிரிப்பிற்குரியது மட்டுமல்ல, சிந்தனைக் குரியது கூட. நாயன்மார்கள், ஆழ்வார்கள் எழுதியது அற்புதமான ஆன்மிக தமிழ் வடிவம். இன்றைய ஆன்மிக தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.
தமிழ் என்பது ஆன்மிகம் கலந்ததில்லை என்ற தவறான கருத்து உள்ளது. தமிழ் என்பது, ஆன்மிகம் கலந்தது. அதிலிருந்து, தமிழை தனியே பிரிக்க முடியாது. சங்க இலக்கியங்களில், தமிழும் ஆன்மிகமும், தமிழும் கலந்தே கையாளப்பட்டுள்ளது.
எனவே, இன்றைய காலகட்டத்தில், ஆன்மிக தமிழ் மீட்டெடுக்கப்பட வேண்டும் என ராஜகோபாலன் பேசினார்.  இந்நிகழ்ச்சியில் பாரதி பாசறை நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கந்தன், நீலகண்டன், தொழிற்சங்க தலைவர் என். துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top