Close
நவம்பர் 22, 2024 5:03 மணி

கீழ்பவானி உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை

ஈரோடு

தமாகா மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா

நீர்வளத் துறையின் மெத்தன போக்கின் காரணமாக  கீழ்பவானி (எல்பிபி) கால்வாயில்  ஏற்பட்ட உடைப்பால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு  ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமாகா இளைஞரணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமாகா இளைஞரணி மாநிலத்தலைவர் எம். யுவராஜா வெளியிட்ட அறிக்கை: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி (எல்பிபி) வாய்க் காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, திருப்பூர், கரூர்மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

நடப்பாண்டு முதல் போக பாசனத்திற்காக ஆகஸ்ட் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்த சில நாள்களி லேயே பெருந்துறை அருகே வாவிக்கடை பகுதியில் அடுத்த டுத்து 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. பிறகு நசியனூர் பகுதியிலும், கடந்த அக்டோபர் மாதம் சத்தியமங்கலம், செண்பகபுதூர் மாரப்பநகர் பகுதியிலும் என 4 இடங்களில் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட து.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து செல்லும் எல் பிபி வாய்க்காலின் 59.6 -ஆவது கிலோ மீட்டரில் பெருந்துறை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் மாலை 5 மணி அளவில் வாய்க்காலின் மேற்புற கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் உள்ள வீடு மற்றும் விளைநிலங்களுக் குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்ட 500 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மஞ்சள், நெற்பயிர்கள் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி மாறிப்போனது. மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்கள் பழுதடைந்தது.

பின்பு உடைப்பு சரிசெய்யப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தலைமை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது. கிணறு இல்லாத பகுதிகளில் நடப்பட்ட நெற்பயிர் ஆங்காங்கே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உடைப்பிற்குப் பிறகு ஏற்பட்ட வெள்ள நீர் பரவலாக பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.

ஏற்பட்டிருக்கும் சேதத்தை மதிப்பிட்டு இழப்பீடு கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு. ஆனால் இதுவரை இழப்பீடு கொடுக்கப்படவில்லை. இது நீர்வளத் துறையின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. இந்த உடைப்பிற்கும் சேதத்திற்கும் நீர்வளத்துறையே முழு பொறுப்பு. மொத்தத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தங்களுக்கு வாக்களிக்காத காரணத்திற்காக ஆளும் திமுக அரசு கொங்கு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஆளும் அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். இல்லாமல் போனால் விவசாயிகளுடைய எதிர்ப்பை இந்த அரசு எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை உணர்ந்து இனியும் காலம் தாழ்த்தாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top