Close
மே 3, 2024 4:16 மணி

அவதூறு வழக்கு… காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு

இந்தியா

ராகுல்காந்தி தகுதி நீக்கம்

4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருப்பது எப்படி” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.

4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்பு டையது. “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.

2019ம் ஆண்டு  பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த  பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதி யை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியதாக  நாளிதழ்களில் செய்தி வெளியானது. 

“எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை,” என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன.  இந்த விவகாரத்தில் அப்போதே ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தன

ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏ -வுமான புர்னேஷ் மோதி வழக்கு தொடுத்தார். தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி  ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த  சூரத் மாவட்ட நீதிமன்றத் தின்  தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா  மார்ச் 23-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதை ராகுல் காந்தி வழக்கறிஞர் பிடிஐ செய்தி முகமையிடம் உறுதிப்படுத் தியிருந்தார்.

இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக  நேற்று ராகுல்காந்தி நேரில் ஆஜராஜானர். நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

மேலும்,  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும்  500-ன் படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான  2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப் படுவதாக நீதிபதி அறிவித்தார்.அதே சமயம் அவருக்கு உடனடியாக  பிணை  வழங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர் களை சந்தித்த மனுதாரர் பூர்ணேஷ் மோடி,  இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூக இயக்கம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

ரூ.10,000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட் டுள்ளதாக  கூறப்படுகிறது. எம்பியாக இருப்பதாக தற்போதைய சூழலில் ராகுல் காந்திக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்ப்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

எம்பி பதவி பறிப்பு..

இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 (3)ன் படிஇ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால் தனது பதவியை இழப்பார் என்று சட்டத்தில் இருக்கிறது. ராகுல் காந்தி 2019-ல் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தற்போது எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி விவகாரத்தில் மக்களவை பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

தண்டனை அறிவிக்கப்பட்டதும், “என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை.” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top