Close
நவம்பர் 22, 2024 4:27 மணி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு… புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்கள் தகுதி

புதுக்கோட்டை

குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வாகியுள்ள மிரட்டுநிலை பள்ளி மாணவர்களுடன் அறிவியல் இயக்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பா.ரித்தீஷ் மற்றும் சு.நந்தகுமார் ஆகியோரின் கிராம மக்களின் மாத வருமானம்  குறித்த ஆய்வுக் கட்டுரை, வரும் ஜனவரி 2023 -ல் குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 30வது ஆண்டாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தி வருகிறது. அதன்படி கடந்த டிசம்பர் 3 -ஆம் தேதியில் புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

அதில் 162 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 16 ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இவை டிசம்பர் 10,11 ஆகிய தேதிகளி;ல தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பா.ரித்தீஷ் மற்றும் சு.நந்தகுமார் ஆகியோரின் “ கிராம மக்களின் மாத வருமானம்” குறித்த ஆய்வுக் கட்டுரை, வரும் ஜனவரி 2023ல் குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

மேற்கண்ட இளம் விஞ்ஞானிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. மணிவண்ணன் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்  இராசு, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் க. சதாசிவம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் வீரமுத்து, மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சம்சுதீன், தலைமை ஆசிரியர் முத்துக்குமார் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர்  இராமதிலகம், கல்வி ஒருங்கிணைப்பாளர்.ஷோபா, வழிகாட்டி ஆசிரியர் நீரஷா, சமூக ஆர்வலர் டீலக்ஸ் சேகர் ஆகியோர் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top